இலங்கையின் தேசிய சின்னங்கள் -தேசியக் கொடி-4

இலங்கையின் இன்றைய தேசியக்கொடி பின்வரும் சிறப்பம்சங்களை உடையதாகும்.சிங்கம் – உடல் வலிமையும், மனோ வலிமையும் மிக்கது. தனக்குப் பொருத்தமற்றதைச் செய்யாது…

Z . A . ஸன்ஹிர் அவர்களால் 1997ல் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் தேசிய சின்னங்கள்’ என்ற கையேட்டில் இருந்து இத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 
தேசியக் கொடி (தொடர்ச்சி)
sri-lanka-flag
இலங்கையின் இன்றைய தேசியக்கொடி பின்வரும் சிறப்பம்சங்களை உடையதாகும்.
சிங்கம்  – உடல் வலிமையும், மனோ வலிமையும் மிக்கது. தனக்குப் பொருத்தமற்றதைச் செய்யாது.
வாள்  – அநீதிக்கு எதிரான போராட்டம்.

 

அரச இலைகள் நான்கு –
மெத்தா – ஒற்றுமையை பலப்படுத்தல்.sri lanka flag - independence
கருணா துன்பத்திலிருந்து மீட்சி பெறல்.
முதிதா பிறரிடம் அனுதாபம் காட்டுதல்.
உபேக்கா  –   எளிமையும் சகிப்புத்தன்மையும்.

 

 

சிவப்பு நிறம் – சமத்துவம் மிக்க சமுதாய அமைப்பினை உருவாக்குதல்.
மஞ்சள் நிறம் – அறிவு, சமாதானம், அகிம்சை,சத்தியம்,தர்மம் என்பவற்றை வெளிப்படுத்தல்.
செம்மஞ்சள் நிறம் – சிறுபான்மைத் தமிழர்.
பச்சை நிறம் – சிறுபான்மை முஸ்லிம்கள்.
large_sri_lanka_flag_3d_model_fbx_ma_mb_obj__mtl_3043eba8-1f71-4f60-b699-bb7910b7056c

 

தேசியக்கொடியை வரைவதற்கென ஒரு குறிப்பிட்ட அளவுத்திட்டம் உள்ளது.
அதன் நீளம்,அகலம் என்பன 21 என்றவாறு இருக்க வேண்டும். நிறங்கள் ஏனைய அளவுத்திட்டங்கள் என்பன  SLS693    1985இல் (இலங்கைத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ) தரப்பட்டுள்ளன. கொடியின் அளவுகள் 1 – 8 வரை உள்ளன. அவையாவன,
150 x 75, 200 x 100, 250 x 125, 300 x 150, 1200 x 600, 1500 x 750, 1800 x 900, 2000 x 1000 ஆகும்.
 தொடரும்…