இலங்கையின் தேசிய சின்னங்கள் -தேசியக் கொடி-5

சுதந்திர தினத்தின் போதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய நிகழ்சிகளிலும் தேசியக்கொடியை ஏற்றல் வேண்டும். எல்லா அரச வைபவங்களிலும் இது ஏற்றப்படும்.செம்மஞ்சள், பச்சை நிறங்கள் கொடிக்கம்பத்தின் பக்கம் இணைந்ததாக இருக்க வேண்டும். ஒரு கம்பத்தில் ஒரு கொடியே பறக்கவிடப்பட …..

Z . A . ஸன்ஹிர் அவர்களால் 1997ல் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் தேசிய சின்னங்கள்’ என்ற கையேட்டில் இருந்து இத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 
தேசியக் கொடி (தொடர்ச்சி)

Sri_Lanka_Flag

சுதந்திர தினத்தின் போதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய நிகழ்சிகளிலும் தேசியக்கொடியை ஏற்றல் வேண்டும். எல்லா அரச வைபவங்களிலும் இது ஏற்றப்படும்.செம்மஞ்சள், பச்சை நிறங்கள் கொடிக்கம்பத்தின் பக்கம் இணைந்ததாக இருக்க வேண்டும். ஒரு கம்பத்தில் ஒரு கொடியே பறக்கவிடப்பட வேண்டும்.இரவு நேரங்களில் அதனை ஏற்றுவதாயின் கொடிக்குப் போதிய ஒளி பாய்ச்சப்படுவது அவசியம்.
வெளிநாட்டுத் தலைவர்கள் எமது நாட்டிற்கு விஜயம் செய்யும் போது எமது தேசியக்கொடியுடன் அவர்களது நாட்டுக்கொடியையும் ஒரே உயரமான கம்பத்தில் ஏற்றி ஒரே மட்டத்தில் பறக்கவிடல் வேண்டும். அரச தலைவர்களின் உத்தியோக பூர்வ விஜயங்களின் போது அவர்களின் ( கார்,புகையிரதம்,விமானம்) முன்னால் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும். எமது நாட்டுக் கொடியை மற்றுமொரு நாட்டில் பறக்கவிடும் போது அந்நாட்டின் நடைமுறை பின்பற்றப்படல் வேண்டும். பல நாட்டுக் கொடிகள் பறக்கவிடப்படும் போது நாடுகளின் பெயர்களின் ஆங்கில அகவரிசைக்கிரமமாகப் பறக்கவிடப்படும்.
தேசியக்கொடியுடன் சமய ரீதியான கொடியொன்றை ஏற்றும் சந்தர்ப்பத்தில் ஒரே மட்டத்தில் அவை இருக்கலாம்.வேறு கொடிகளை பறக்கவிடும் போது தேசியக்கொடி மத்தியிலும், சற்று உயரமாகவும் இருக்குமாறு பறக்கவிடல் வேண்டும். கட்டடங்களில் ஏற்றும் போது நிலத்துக்குச் சமாந்தரமாகவன்றி 45 கோணத்தில் மேல்நோக்கி இருக்க வேண்டும். பாதைக்கு மத்தியில் கட்டும் போது சிங்கம் மேல் நோக்கிப் பார்ப்பதாக அமைக்கக் கூடாது. மாறாக பாதைக்கு சமாந்தரமாக இருக்க வேண்டும்.

 தொடரும்…