இலங்கையின் தேசிய சின்னங்கள் – தேசியக் கொடி-6

தேசியக் கொடி-6

மேடைகளில் தேசியக்கொடியை ஏற்றும் போது பேச்சாளருக்கு வலப்புறம் அது இருக்க வேண்டும். அல்லது பின்னாலுள்ள சுவரில் தொங்க விடலாம்.சாதாரண ஊர்வலங்களில் கொடியைக் கொண்டு செல்லும் போது மரியாதைக்காக சரித்துப்பிடித்துக் கொண்டு செல்லக் கூடாது. அப்போது முன்னால் செல்பவர் வலப்புறமாக தாங்கிச் செல்ல வேண்டும்.

தேசியக் கொடியை ஏற்றும் போது நிமிர்ந்த நிலையில் நிற்பது அவசியம்.அப்போது சீருடை தரித்த முப்படையினர்,பொலிசார் ஆகியோர் தவிர்ந்த ஏனையோர் தமது தலையங்கிகளைக் கழற்றி மரியாதை செலுத்த வேண்டும். காலநிலை அல்லது வேறு காரணங்களினால் அதனை கீழிறக்கக் கூடாது.

கொடிகளுள் முதலாவது ஏற்றப்பட வேண்டிய கொடி தேசியக்கொடியாகும். கீழிரக்கப்படும் போது இறுதியில் இறக்கப்பட வேண்டியதுமாகும்.கோடியை இறக்கி உரிய முறையில் மடித்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதனை நிலத்தில் வைக்கக் கூடாது.

கிழிந்த அல்லது மங்கிய வர்ணமுடைய கொடிகளைப் பறக்கவிடக்கூடாது. தனியார் தமது சொந்த வைபவங்களின் போது தேசியக்கொடியை ஏற்றக்கூடாது. விளம்பர நோக்கங்களுக்காகவும் அதனைப் பயன்படுத்தகூடாது.

தேசிய துக்க தினங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அவ்வாறு ஏற்றும் போது முதலில் கொடியைக் கம்பத்தின் உச்சி வரை கொண்டு சென்று சற்று நேரத்தின் பின்னர் கம்பத்தின் மூன்றில் ஒரு பகுதி வரை மேலே இருக்கத்தக்கவாறு இறக்கி, பறக்கவிடல் வேண்டும். அரச தலைவர்கள் அல்லது நாட்டிற்காக உயிரை அர்ப்பணிக்கும் வீரர்களின் பூதவுடலுக்கு மட்டும் தேசியக்கொடியைப்  போர்த்தலாம்.half-flag-l-940x470

 

” தேசியக்கொடி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டைக்  குறிக்கும் தேசிய சின்னம். அதனை நாம் பேணுவோம் “.