இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாட்டில் புதிய தலைவர் தெரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவரைத் (அமீர்) தெரிவு செய்வதற்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. தெரிவுகள் அனைத்தும் இரகசிய வாக்கெடுப்பு …
2018 (ஹிஜ்ரி 1440) ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்லயிலுள்ள NICD மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 1,600 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
கடந்த வருட செயற்பாட்டு அறிக்கைகள், இரு உதவித் தலைவர்களுக்கான தேர்தல், மத்திய மஜ்லிஸுஷ் ஷூரா அங்கத்தவர்கள் (மத்திய சபை அங்கத்தவர்கள்) தெரிவு, அங்கத்தவர் கருத்துரை, விடைபெறும் தலைவரின் விஷேட உரை மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெறவுள்ள இம்மாநாட்டில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவரைத் (அமீர்) தெரிவு செய்வதற்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. தெரிவுகள் அனைத்தும் இரகசிய வாக்கெடுப்பு மூலமே நடைபெறும்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 24 வருடங்களாக பணியாற்றி அதனை சிறப்பாக வழிநடத்தினார். நான்கு வருடங்களுக்கொரு முறை நடைபெறும் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஆறு தடவைகள் தொடர்ந்தும் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே அங்கத்தவர்களால் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய யாப்பு திருத்தத்திற்கு அமைவாக ஒருவர் தொடராக இரண்டு தவணைகள் மாத்திரமே தலைவராக தெரிவு செய்யப்பட முடியும் என்ற சட்டத்தினடிப்படையில் இம்முறை புதிய ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்படுவார் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ் தெரிவித்துள்ளார்.
அப்போ கிலாபத் கனவு கலைந்தது என்று சொல்லுங்கள். அல்ஹம்துலில்லா இனி சற்று நிம்மதியாக வாழலாம். அத்துடன் NFGG – ஜமாத்தின் கடசி (நஜா முஹம்மதின் )அரசியல் தொடர்பாகவும் ஏதாவது தகவல் பொதுமக்களுக்கு தத்ர முடியுமா?