இளம் அறிவிப்பாளர் – முஹம்மத் செளக்கி
தேசிய ரீதியில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிக்கான முடிவுகளுக்காக காத்திருக்கும் இவர் தேசிய விருதுக்குரிய அறிவிப்பாளராக…
சாய்ந்தமருதை சேர்ந்த முஹம்மத் செளக்கி எமது நாட்டின் ஒரு இளம் அறிவிப்பாளராக மிளிர்கின்றார்.
இவா் ஆரம்பக் கல்வியினை சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் கற்றார். தற்போது கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர கலைப்பிரிவில் கல்விகற்கின்றர். இவ்வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டின் பிரபல அறிவிப்பாளர் திரு. B.H. அப்துல் ஹமீத் அவர்களின் குரல்வளத்தினாலும் அறிவிப்பு திறனினாலும் கவரப்பட்டு தானும் சிறந்த அறிவிப்பாளனாக மிளிர வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்ற இவ் இளம் மாணவன் செளக்கி தனது இலக்கை நோக்கிய பயணத்தை தனது எட்டாம் தரத்தில் பாடசாலை மாணவர் மன்றத்தின் அறிவிப்பாளனாக தொடங்கினார்.
இப்பயணத்தில் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட அறிவிப்பு போட்டிகளிலும் சாதனைகள் படைத்துள்ளார்.
இவரின் இவ்வெற்றி இலகுவாக கிடைக்கப்பெற்றது அல்ல. பல கஷ்டங்களையும், துன்பங்களையும், சவால்களையும் தனம்பிக்கையோடு எதிர்நோக்கி பெறப்பட்டது.
மாவட்ட ரீதியாக நடைபெற்ற அறிவிப்பு போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று தற்போது தேசிய ரீதியில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிக்கான முடிவுகளுக்காக காத்திருக்கும் இவர் தேசிய விருதுக்குரிய அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டுமென புத்தளம் ஒன்லைன் (Puttalamonline) மனமகிழ்வுடன் வாழ்த்துகின்றது.