இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி புத்தளத்தில் ஆரம்பம்

புத்தளம் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிக்கொணர்வதை இலக்காகக் கொண்டு பஹன மீடியா ஏற்பாட்டில் நடைபெறும் மூன்று நாள் (Mobile Journalism-MoJo) “மோஜோ” பயிற்சி நெறி நேற்று (14-01-2023) ஆரம்பமாகியது.

ஓய்வுநிலை புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸன்ஹீர், சட்டத்தரணி அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான், வளவாளராக மொஹமட் அஸ்வர் ஆகியோரின் பங்கேற்பில் இவ் பயிற்சி அமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் ISoft கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி நெறிக்கு புத்தளம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 16 இளம் ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்

பஹன மீடியா பணிப்பாளா் அஷ்ஷெய்க் எம்எஸ் அப்துல் முஜீபின் தலைமையில் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி நெறிக்கு அமேசான் கல்லூரி, ‘டயபர்ஸ் லிமிடெட்’, அல் ஹிமா இஸ்லாமிய நிறுவனம், ISoft கல்லூரி ஆகியன அனுசரணை வழங்குகின்றன.

பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதோடு “NewsNow” ஊடகத்தினோடு இணைந்து தமது படைப்பாக்கங்களை வெளியிடுவதற்கான அவகாசமும் வழங்கப்படும்.

பயிற்சி நெறி நேற்றும் இன்றும் (14,15) நடைபெற்றதோடு இறுதி நாளாகிய 21 ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வில் புத்தளத்தைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK