இளம் கண்டுபிடிப்பாளர் – ஸக்கி லதீப்
சிறு வயது முதல் விஞ்ஞான பிரிவில் கற்க வேண்டும் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாது போனாலும் மருத்துவத்துடன்…
குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த ஸக்கி லதீப் (Zacky Latheef ) சர்வதேசத்தில் தனது கண்டுபிடிப்புக்கென ஓரிடத்தை தக்கவைத்துக் கொண்ட எமது நாட்டின் ஒரு இளம் கண்டுபிடிப்பாளராக மிளிர்கின்றார்.
தற்போது இருபது வயதை தொட்டுள்ள இவர் தனது புத்தாக்க முயற்சியை தனது பதினாறாவது வயதில் தனது உயர்தர வகுப்பிற்கான தனிச் செயற்றிட்ட முயற்சியாக ஆரம்பித்தார். க.பொ.த சாதாரண தரம் வரை மடிகே முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் தனது உயர்தரத்தை குருணாகல், பரகஹதெனிய தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவிலும் தொடர்ந்தார்.
சரும நோய்களுக்கான ஆயுர்வேத மருத்துவ பசை (herbal cream) ஒன்றையே இவர் தனது புத்தாக்கமாக முன்வைத்து புகழ் பெற்றுள்ளார். மருத்துவத்துடன் தொடர்புடைய இக்கண்டுபிடிப்புக்கு மருத்துவத் துறையில் சிறப்பு தேர்ச்சி எதுவும் அவசியமில்லை என்பதும் ஒரு கண்டுபிடிப்பாளனாக பிரகாசிக்க ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தேடல் இவையே இன்றி அமையாதவை எனவும் நிரூபித்துள்ளார்.
சிறு வயது முதல் விஞ்ஞான பிரிவில் கற்க வேண்டும் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாது போனாலும் மருத்துவத்துடன் தொடர்புடைய இக்கண்டுபிடிப்பு இவருக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தந்துள்ளது அத்துடன் மருத்துவத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற இவரது இலக்கை எட்டக்கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இவரின் இவ்வெற்றி இலகுவாக கிடைக்கப்பெற்றது அல்ல. பல கஷ்டங்களையும், துன்பங்களையும், சவால்களையும் தனம்பிக்கையோடு எதிர்நோக்கி பெறப்பட்டது.
இவரது முன்னேற்றம், கிடைத்த வரவேற்பு மேலும் இவரது திறமைகள் மீது பொறாமை கொண்ட ஒரு குழுவினரால் 2013.06.05 அன்று கடுமையாக தாக்கப்பட்டு சுமார் 6 மாத அளவில் தீவிர சிகிச்சை பெற வேண்டிய கஷ்டமான நிலைமைக்கு தள்ளப் பட்டாலும் இத்தாக்குதலால் வாழ்வில் பல பெறுமதியான விடயங்களை இழந்தாலும் அனைத்தையும் தனம்பிக்கையோடு எதிர்நோக்கி இச்சாதனையை புரிந்துள்ளார்.
Zacki Skin Paste மற்றும் Zacki Skin Balm என்பன தற்போது சந்தைபடுத்தப்பட்டுள்ளன. இவரது புதிய கண்டுபிடிப்பு Zacki Skin Paste இற்கான (Patent) இலங்கை புலமைச்சொத்து அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ZACKI HERBAL PRODUCTS (PRIVATE) LIMITED நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான கட்டுமானபணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/zackiherbal
https://www.facebook.com/zackiskinpaste?ref=hl
படங்கள்: நன்றி ஸக்கி முகநூல்
அல்ஹம்துலில்லாஹ்
நிறைய எழுத்து பிழைகள் லபெல் இல் தென்படுகிறது .கட்டாயம் திருத்த வேண்டும் சகோதரனே
Thanks