இஸ்லாமிய முறைக்கு மாறுகின்றது கொழும்பு மாநகர சபை

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொரளை மயானத்தில் இட நெருக்கடி காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதில்…

Rasminmisc

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொரளை மயானத்தில் இட நெருக்கடி காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதில் பாரிய பிரச்சினைகளை மயான நிர்வாகம் சந்தித்து வருவதாகவும் இதற்கான மாற்றுத் தீர்வு தொடர்பில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. பொரளை மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்யப்படும் முறையில் ஏற்பட்டுள்ள சிக்களே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

பொரளை மயானத்தில் பௌத்தர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று அனைவருக்கும் தனி தனித்தனியாக இடம் ஒழுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட குறித்த இடத்தினை பயன்படுத்துவதை தொடர்ந்தும் தவிர்த்தே வந்துள்ளார்கள். இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை என்னவென்றால், பொதுவாக ஒரு சடலம் அடக்கம் செய்யப்பட்டு ஆகக் கூடியது 06 மாதங்களுக்குள் உக்கி மண்ணோடு சேர்ந்துவிட வேண்டும். ஆனால் பொரளை மயானத்தில் அந்நிலை இல்லை.

ஒரு சடலம் அடக்கம் செய்யப்பட்ட பின் குறித்த சடலம் மண்ணோடு மண்ணாக சேர்ந்து உக்கி அழிந்து போவதற்கு குறைந்தது 02 வருடங்களை வரை காலம் தேவைப்படுகின்றது. மரணித்த உடல்களுக்கு போமலின் என்ற ஒரு வகையான இரசாயணம் தடவப்பட்டு, ஒரு வகையான பொ(பா)லிதீனால் உடல் சுற்றப்பட்டு பின்னர் ஒரு பெட்டியில் வைத்தே உடலை அடக்கம் செய்து வருகின்றார்கள். இதன் காரணமாகவே உடல் முழுமையாக உக்கி அழிவதற்கு சுமார் 02 வருடங்கள் தேவைப்படுகின்றது.

பொரளை மயானத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 20 சடலங்கள் அடக்கத்திற்காக கொண்டு வரப்படுவதாகவும், ஆகக் கூடியது 06 மாதங்களில் உக்கி அழிய வேண்டிய சடலங்கள் போமலின் இரசாயணம் பூசப்பட்டு, பொ(பா)லிதீன் சுற்றப்படுவதினால் 02 வருடங்கள் வரை அழியாமல் இருப்பதினால் பாரிய இட நெருக்கடியும், சுகாதார பிரச்சினைகளும் ஏற்படுவதாக கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி Dr. ருவான் விஜயமுனி அவர்கள் கடந்த 12.02.2015 அன்று வெளியான செரண்டிப் நாளிதழுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இட நெருக்கடியை சமாளிப்பதற்காக பொரளை மயானத்தில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், குறித்த திட்டத்திற்கு “கீரின் கெரியர்” என்று பெயரிட்டுள்ளதாகவும் டாக்டர் ருவான் தெரிவிக்கின்றார்.

“கிரீன் கெரியர்“ என்றால் என்ன? பொரளை மயானத்தில் கிரீன் கெரியர் என்ற பெயரில் சூழல் சுத்தமாக்கும் தனியான ஒரு பகுதி உருவாக்கப்படவுள்ளது. இறந்தவரின் உடலுக்கு போமலின் உள்ளிட்ட எந்தவொரு இரசாயண சேர்வையையும் பூசாமலும், பொ(பா)லிதீன் போன்றவற்றின் மூலம் உடலை மூடாமலும், 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்வதற்காக கொண்டு வரப்படும் சடலங்களை குறித்த கிரீன் கெரியர் பகுதியில் புதைப்பதற்கு முடியும்.

இந்த முறையில் புதைப்பதே சூழலுக்கு ஏற்றதும், சுகாதாரமான முறையுமாகும் என்பதே கொழும்பு மாநகர சபையின் கருத்தாகும். இஸ்லாமிய முறையே இவ்வுலகுக்கு உகந்தது கொழும்பு மாநகர சபை இன்று எடுத்த முடிவை இஸ்லாம் இவ்வுலகின் முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்ட போதே இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தி விட்டது. ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்” என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார். “என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்” “உன் பாவத்துடன், என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்” (எனவும் அவர் கூறினார்) (இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நஷ்டமடைந்தவனாக ஆகி விட்டான். தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே” எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான். அல்குர்ஆன் 5:27-31 அல்லாஹ் கூறும் இந்தச் சுவையான சம்பவம் உலகில் நடந்த முதல் கொலையை விவரிக்கும் அதே வேளையில், ஒருவர் இறந்து விட்டால் அவரைப் எப்படி புதைக்க வேண்டும் என்ற முன் மாதிரியை அல்லாஹ்வின் இயற்கை வேதமான திருக்குர்ஆன் மனித குலத்திற்குக் கற்றுக் கொடுக்கின்றது. உலகில் வாழும் 120 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்த நடைமுறையைத் தான் கையாள்கின்றனர்.

பூமியில் புதைக்கும் இந்த முறை தான் இயற்கைக்கு உகந்ததாகும். இறந்தவரை அடக்க செய்ய இஸ்லாம் காட்டும் வழி ஒருவர் இறந்து விட்டால் அவருடைய உடலை முழுமையாக குளிப்பாட்ட வேண்டும். பின்னர் துணியால் மறைக்க வேண்டும். இதை கஃபன் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. ‘நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ 915, அபூ தாவூத் 3539, இப்னு மாஜா 1461, அஹ்மத் 2109, 2349, 2878, 3171, 3251 இறந்தவரை புதைக்கும் போது அவருடைய உடலில் வெள்ளை ஆடையை போர்த்த வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

வெள்ளை ஆடை இல்லாவிட்டால் வேறு நிற ஆடைகளிலும் சடலத்தை மறைக்கலாம், அல்லது தைக்கப்பட்ட ஆடையைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். (புகாரி 1269, 4670, 5796) எப்படியானாலும் ஆடையில் போர்த்தி புதைக்க வேண்டும் என்பதே இஸ்லாம் காட்டிய முறையாகும். இடத்தைப் பிடிக்க மார்க்கத்தில் இடமில்லை இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் இறந்தவர்களுக்காக இடத்தைப் பிடித்து, கல்லறை கட்டுவதற்கு அனுமதியில்லை.

ஒரு உடலை அடக்கம் செய்வதற்காக வெட்டப்படும் குழியில் இருந்து எவ்வளவு மண்ணை வெளியில் எடுத்தோமோ அந்த மண்ணை மாத்திரம் தான் மீண்டும் குழியில் போட்டு மூட வேண்டுமே தவிர, அதிகப்படியான மண்ணையொ கல்லையோ நிறப்பி மண்ணறையை கல்லறையாக மாற்றக் கூடாது என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகின்றது. கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள், நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807 அடக்கத் தளங்களில் பெயர் பலகை வைத்து கப்ருகள் மீது எழுதும் வழக்கம் பல இடங்களில் நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த நடை முறையும் இடப்பற்றாக் குறைக்குக் காரணமாகும். இஸ்லாம் இதனையும் கடுமையாக எதிர்க்கின்றது.

கப்ருகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 2807 மக்கள் தொகை அதிகரித்து அடக்கத்தலம் சுருங்கிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு இடத்தில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அதே இடத்தில் மற்றொருவரை அடக்கினால் தான் நெருக்கடி குறையும். அடக்கத்தலத்திலும் தங்களுக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொண்டால் எதிர் காலத்தில் அடக்கம் செய்ய அறவே இடம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கப்ருகளைப் பூசுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610 கட்டுவது மட்டுமின்றி பூசுவதும் தெளிவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சிமிண்ட் சுண்ணாம்பு போன்றவற்றால் பூசுவதும், சந்தனம் பூசுவதும், வேறு எதனைப் பூசுவதும் இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகும். யாருடைய கப்ருக்கும் இதில் எந்த விதிவிலக்கோ, வித்தியாசமோ இல்லை. எரிப்பதல்ல;

உரிய முறையில் புதைப்பதே உலகுக்கு உகந்தது சரியான முறையில் புதைக்காமல் இரசாயணம் மற்றும் பொ(பா)லிதீன் போன்றவற்றை சேர்ந்து புதைக்கும் முறையில் தவறு செய்வதைப் போல, இன்னும் சிலர் சடலத்தை எரிக்கின்றார்கள். உரிய முறையில் புதைக்காமல் எரிப்பதனால் சுற்றுச் சூழல் மாசடைகின்றது என்பதை இவர்கள் புரிய மறுக்கின்றார்கள். “இறந்த பின் சடலத்தை எரிப்பதற்குப் பதிலாக, சுற்றுப்புறச் சூழலுக்கு உதவும் விதத்தில் அதைப் பூமியில் ஒரு மரத்திற்கு அடியில் புதையுங்கள். மண்ணில் கலந்து சிதிலமாகும் உடல் அந்த மரத்திற்குச் சத்துக்களை வழங்கும். அந்த மரம் அதைப் பல ஆண்டுகளுக்கு, கார்பன் டை ஆக்ஸைடை உயிர் காக்கும் ஆக்ஸிஜனாக மாற்றித் தருகின்றது. (மனித இனம் மட்டுமல்ல! உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குவதும் விநியோகிப்பதும் தாவர இனம் தான்.) கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றித் தரும் இந்த அற்புதமான ஒரு செயலைச் செய்யாமல், இறந்த உடலைப் புதைக்காமல், கார்பன்டை ஆக்ஸைடை அதிகப்படுத்தி விடும் நெருப்புக்குள் நம்முடைய உடலை எரிய விடுவது வெட்கக் கேடாகும்” என்று கூறுகிறார், இனப்பெருக்க உயிரியல் துறை நிபுணர் பேராசிரியர் ரோஜர் ஹார்ட் என்பவர். ஆஸ்திரேலியாவில் 850 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒரு சடலம் எரிக்கப்படுகிறது. சுமார் 90 நிமிடங்களுக்கு எரியும் இந்த நெருப்பினில் 50 கிலோ கார்பன்டை ஆக்ஸைட் வெளியாகின்றது. சடலத்துடன் எரிந்த எரிபொருள் மற்றும் மரக்கட்டைகள் மூலம் வெளியான கார்பன் டை ஆக்ஸைடின் மதிப்பு இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

சடலங்களை எரிப்பது பூமியைச் சுற்றி உள்ள பசுமைக் குடிலுக்கு மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய காரியமாகும் என்று அவர் தெரிவிக்கிறார். ஒருவர் இறந்ததும் தன்னுடைய உடலை மண்ணோடு மண்ணாகக் கரையும் வகையில் தானம் செய்வது, அதாவது மண்ணில் அடக்கம் செய்வது வன வளத்தைக் காக்கும் சிறந்த பணியாகும் என்று அவர் மேலும் குறிப்பிடுகின்றார். Cremation unwise idea” says scientist – “எரிப்பது புத்திசாலித் தனமான காரியமல்ல” விஞ்ஞானி சொல்கிறார் – என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகள் பிரபல ஹிந்து நாளேட்டில் 19.04.2007 அன்று வெளியான செய்தியாகும். உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அதை விட அதிகமான கிறித்தவர்கள் ஆகியோர் தங்கள் சடலங்களை எரிக்க ஆரம்பித்தால் ஏற்கனவே சூடாகிக் கொண்டிருக்கும் பூமியின் வெப்பத்தை அது அதிகரிக்கச் செய்து, உலகம் வெகு சீக்கிரத்தில் அழிந்து போய் விடும்.

ஆனால் திருக்குர்ஆனின் வழி காட்டுதலால் இறந்த மனிதர்களின் சடலங்கள் மண்ணில் புதைக்கப் படுகின்றன. மண்ணில் கிடந்து சிதிலமாகும் இந்த உடல் மரத்திற்கு உரமாகி சத்துக்களை வழங்கும் என்று அந்த அறிவியல் அறிஞரின் கூற்று மேம்போக்கானதல்ல! அறிவியல் உண்மையாகும்.

வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன. ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும், 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது.  இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது. வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன!  இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.

மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன.  அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றில் நைட்ரேட்டுகள் உருவாகின்றன.  கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது.  இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன.  இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான். மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது.  மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங் களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது.  பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது.  இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப்படுகின்றது.

மனிதனால் மரத்துக்குப் பயன்; மரத்தால் மனிதனுக்குப் பயன் என்று மனிதனுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை இது விளக்குகின்றது. இறந்த உடலை மண்ணில் புதைப்பதன் மூலம் தான் இந்தச் சுழற்சி சாத்தியமாகும். அவ்வாறு புதைப்பது தான் இயற்கையானதாகும். இதையே திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் குறிப்பிடுகின்றது. இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப் படுத்துவோம். அல்குர்ஆன் 20:55 மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம்.

நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப் படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. அல்குர்ஆன் 22:5 இந்த வசனங்களின் கருத்து அப்படியே அறிவியல் கண்டு பிடிப்புகளுடன் பொருந்திப் போவதை நாம் பார்க்க முடிகின்றது.

மண்ணில் படைக்கப்பட்டவன் மண்ணிலேயே திருப்பப்படுகிறான் என்ற உண்மையையும் இந்த வசனங்கள் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றன. மனிதனை உரிய முறையில் மண்ணில் புதைப்பது தான் இயற்கையானது என்பதை அல்லாஹ்வின் வசனங்களிலிருந்தும், அறிவியல் உண்மைகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். உலகம் இப்படித் தான் இயங்க வேண்டும் என்ற ஓர் இயற்கை விதியை அல்லாஹ் நிர்ணயித்து உள்ளான். அவனே அதைத் தனது வேதத்தின் மூலம் வழங்கி, இயற்கை விதியையும் வேத விதிகளையும் ஒத்துப் போகச் செய்கிறான். இங்கு இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகத் திகழ்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம். – See more at: