இஹ்யாவுல் உலூம் அரபுக்கல்லூரிக்கு புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கல்லூரியில் ஷரீஆ கற்கையுடன் உயர்கல்வியும் மாணவர்களுக்கு தேவையான அரச பரீட்சைகள் O/L மற்றும் A/L அல் ஆலிம் அஹதியா தர்மச்சாரிய (சான்றிதழ்) போன்றவைகளுக்காகவும் இங்கு மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள்.

அரபு, தமிழ், சிங்களம், ஆங்கிலம், மற்றும் உருது போன்ற மொழிக்கல்விகளும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. எதிர்வரும் காலங்களில் மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கல்வியும் NVQ சான்றிதழும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு மாணவர்கள் பாடசாலை சென்று வருவதுடன் தொடர்ந்து ஷரீஆ கல்வி கற்கக்கூடிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகைமைகள் :

ஹிப்ழ் பிரிவு 3 வருடம்

பாடசாலைக் கல்வியில் தரம் ஆறில் சித்தி அடைந்து இருத்தல்.

அல்குர்ஆனை பார்த்து ஓதும் ஆற்றல் உடையவராக இருத்தல்.

12 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல்.

சிறந்த உள உடல் ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.

ஷரீஆ பிரிவு 7 வருடங்கள் :

பாடசாலைக் கல்வியில் தரம் 9ல் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

15 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல்.

அல்குர்ஆனை பார்த்து ஓதும் ஆற்றல் உடையவராக இருத்தல்.

சிறந்த உடல் உள ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.

குறிப்பு O/L எழுதிய மாணவர்களுக்கு ஷரீஆ பிரிவில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இம்மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நேர்முகப்பரீட்சை கல்லூரியில் நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு இத்தொலைபேசி (071 6818 438 | 076 158 6090| 070 240 7014 | 071 463 0715) இலக்கங்களை அழைக்கலாம்.

 

WAK