உடப்பு கிராமத்தில் தாய் தந்தையா்களுக்கிடையில் பிரச்சினையால் மகன் தற்கொலைக்கு முயற்சி

உடப்பு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்டு வரும் தீ மூட்டி தற்கொலை செய்யும் முயற்சியில் இதுவரைக்கும் ஐந்து பேர்கள் தீயின்…

(க.மகாதேவன்)

உடப்பு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்டு வரும் தீ மூட்டி தற்கொலை செய்யும் முயற்சியில் இதுவரைக்கும் ஐந்து பேர்கள்   தீயின் காரணமாக மரணத்தை தழுவியுள்ளனர்.
மற்றுமொரு இளைஞனான இதயவாணன் தினேஷ்காந்தன்(வயது-18) (12)திகதி சனிக்கிழமை வீட்டில் தாய் தந்தையா்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். அத்துடன்  உடலில் தீப்பற்றியதுடன் வருத்தம் தாங்க முடியாது வீட்டைச் சுற்றி ஓடியுமுள்ளாா்.
இதனைக் கண்ட அயல் வீட்டாா் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன்  அவர் மேலதிக சிகிட்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடப்பில் தீயின் காரணமாக  மூன்று  பெண்களும்  ஒரு வாலிபரும் இது வரைக்கும் மரணித்துள்ளனர்.பெற்றோல் ஊற்றுவதும் அத்துடன் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்வது  கொள்வது      உடப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கடன் தொல்லை  அத்துடன் காதல் போன்ற விடயங்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
எனவே இதனை முடிவுக்குக் கொண்டு வர சகல தரப்பினரும் முன்வர வேண்டும்.