உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா

இந்தக் கட்டிடம் வடமேல் மாகாண நிதியொதுக்கீட்டின் 55லட்சம் ரூபா செலவில் நிா்மாணிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் திரு.தர்மசிறி தசநாயக மாகாண…

 

(க.மகாதேவன்)

உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின்  புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா(17)திகதி திங்கட் கிழமை இடம்பெற்றது.
இந்தக் கட்டிடம் வடமேல் மாகாண நிதியொதுக்கீட்டின் 55லட்சம் ரூபா செலவில் நிா்மாணிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் திரு.தர்மசிறி தசநாயக மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட ஸ்ரீ.சு.கட்சி அமைப்பாளருமான திரு.என்.டி.எம்.தாஹிர்   வடமேல் மாகாணசபை உறுப்பினர் திரு.சந்தியா எஸ்.குமார ராஜபக்ஷ ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவர் திரு.க.தெட்சணாமூர்த்தி சிலாபம் மாநகர சபை உபதலைவர் சாதிக்குல் ஹமீன் சிலாபம் மாநகர சபை உறுப்பினர் திரு்.டிலான் பெனாண்டோ ஆகியோா் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அதிதிகள்  தமிழ் முறைப்படி  ஆரத்தி எடுக்கப்பட்டு வரவேற்கப் படுவதையும் முதலமைச்சர் புதிய கட்டிடத்தை நாடா வெட்டி திறப்பதையும் காணலாம்.