உரிமை மீட்பு விழிப்புணர்வு நடைபவனி புத்தளம் நகரை வந்தடைந்தது
வடக்கு முஸ்லிம்களின் உரிமை மீட்புப் போராட்டத்தில் குதித்துள்ள சகோதரர்கள் ஹாமீம் மற்றும் ஜாரிதீன் ஆகியோரின் கிளிநொச்சி நாச்சிக்குடா முதல் கொழும்பு வரையான விழிப்புணர்வு நடைபவனி போராட்டக் குழு நேற்று முன்தினம் (06-11-2022) புத்தளம் நகரை வந்தடைந்தது.
.
புத்தளம் கொழும்பு முகத்திடலில் புத்தளம் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் அவர்களை வரவேற்று கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
.
ரனீஸ் பதூர்தீன் அவர்கள் வருகை தந்திருந்த முழங்காவில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் குழுவினரிடம் இவ்விடயத்தில் பிரதேச சபை மட்டத்திலிருந்து சபை உறுப்பினர் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான வழிகாட்டல்களை வழங்கியதோடு நாளை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டில் இவ்விடயம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவைப்பெற்று இவ்விடயம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கக்கூடிய வகையில் தன்னாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
.
நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் தலைமையிலான புத்தளம் நகரசபை இப்போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்நடை பவனிப் போராட்டத்தில் பங்குபற்றியுள்ள முதியவர் ஜாரிதீன் எழுபது வயதையும் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
WAK



