உலக பல்கலைக்கழக தரவரிசையில் பேராதனை

த டைம்ஸினால் வருடந்தோறும் நடாத்தப்படும் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கையில் புகழ்பூத்த பல்கலைக்கழகமான பேராதனைப் பல்கலைக்கழகம் இணைக்கப்பட்டுள்ளது. 92 நாடுகளில் உள்ள 1200 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்படும் இப்பட்டியலில் 401-500க்கிடைப்பட்ட தரத்தில் பேராதனை இணைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் 801-1000க்கிடைப்பட்ட தரவரிசையில் இணைக்கப்பட்டுள்ளது. ஜுன் 12ம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் இலங்கையைச் சேர்ந்த மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்களே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய ராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தரவரிசையில் முதலாம் இடத்தை பிடித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் முக்கியமான உள்ளீடான வெளிநாட்டு மாணவர்களின் இடஒதுக்கீடு இத்தரவரிசையை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாகும். கொழும்பு பல்கலைக்கழகத்தைப் போன்ற மாணவர் சனத்தொகையைக் கொண்டுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழமானது மாணவ சனத்தொகையில் 41 வீதமான வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டுள்ள அதேவேளை கொழும்பு 22,322 மாணவர்களையும் பேராதனை 17,482 மாணவர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.