எச்.எம். Spices வர்த்தக நிலையம் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் எச்.எம்.குறூப் நிறுவனத்தின் இன்னொரு அங்கமான எச்.எம். Spices வர்த்தக நிலையம் அண்மையில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் கே.கே. வீதியில் அமைந்துள்ள எச்.எம்.வர்த்தக தொகுதி கட்டடத்தில் அமைந்துள்ள இந்நிலையம் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பில் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் புத்தளம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலதுங்க போன்றோரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புத்தளம் நகரில் இதுவரை இல்லாத ஒரு புதுவிதமான அனுபவத்தை HM Spices தர காத்திருக்கிறது. பல்வேறு வகையான இலங்கைக்கே உரித்தான முதல்தர Spices வகைகள், nuts வகைகள், essential oil, தேயிலை வகைகள் போன்றவற்றை இங்கு பெற்றுக் கொள்ளமுடியும்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமான அரிய வகை spices, nuts மற்றும் உலர்ந்த பழ வகைகளையும் கொள்வனவு செய்யமுடியும்.

புத்தளம் நகரின் பிரபல கட்டட நிர்மாண நிறுவனமான HM Builders & Supplies (Pvt) Ltd நிறுவனத்தின் தாய் நிறுவனமான எச்.எம்.குறூப் கூட்டு நிறுவனத்தின் இரண்டாவது அங்கமாக HM Spices திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

WAK