ஜாமிஆ நளீமிய்யாவின் “ஆசிரியத் தந்தை” புஹாரி மெளலவி – 01

(மகன் பைசுர் ரஹ்மான்)

(1930 ) நவம்பர் 29

தந்தை / தியாகம் (1)

“கோழி மேச்சாலும் கவுமண்டில மேய்க்கோணும்” என்று சொல்லுவாங்க. ( “கொரோனா” வும் இதற்கு வலுவூட்டுவது போல்தான் தெரிகிறது) இதற்குக் காரணம் தொழில் பாதுகாப்பும், ஓய்வூதியம் (Pension) மற்றும் விதவைகள் அநாதைகள் ஓய்வூதியம் (W&OP) கிடைக்கும்.

14 வருடங்களாக, ஆசிரியராக, தந்தை அவர்கள் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில்தான் சமூகத் தியாகி நளீம் ஹாஜியார் அவர்களின் சிந்தனையில் உதித்த ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் (1973) ஆசிரியராக இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அக்காலப் பிரிவில் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராக மதிக்கப்பட்டவரான நளீமிய்யாவின் ஸ்தாபக அதிபர் கம்மல்துறை மறைதாஸன் மௌலவி எம்.யூ.எம். தாஸீன் (Bahjl, Nadvi ( Lucknow), M.A. ( Al Azhari) (1932 – 1977) அவர்கள் எமது வீட்டுக்கு 18.06.1973. அன்று இரவு 9 மணியளவில் வந்தார்கள். (நளீம் ஹாஜியார் தந்தைக்கு நேரில் அறிமுகம் இல்லை. ஆயின் தாஸின் நத்வியும் தந்தையும் நண்பர்கள். விடயத்தை கூறி தந்தை அவர்களை காரிலேயே அழைத்துவரும்படி நளீம் ஹாஜியார் பணித்துள்ளார்கள்.

நளீம் ஹாஜியார்

ஆனாலும் அருமைத் தந்தை அவர்கள், சிறிது அவகாசம் தரும்படியும் தனது குடும்பத்தவர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து எனது முடிவை நானே 21.07.1973 இல் நேரில் வந்து மதிப்பிற்குரிய ஹாஜியார் அவர்களிடம் தெரிவிப்பதாகக் கூறி வழி அனுப்பினார்கள். தந்தையவர்கள் இதுவிடயமாக கலந்தாலோசனை செய்த போது குடும்பத்தில் பெரும் பிரச்னையாக அமைந்தது. கடிதமொன்றில் ( 1973. 7.19) இவ்வாறு ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

“… உனக்கென்ன பைத்தியமா ? அரசாங்கத்தில் கிடைக்கும் சலுகைகளும் இலகுவான வேலைகளும் பென்ஷன் , விதவை அநாதை நிதியுதவி என்பன அங்கு எதிர்ப்பார்க்க முடியாது .தலை குனிந்துதான் நடக்க வேண்டியிருக்கும். அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை பின்னால் பறக்க விடமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி? சொந்த ஊரிலே வீட்டுக்கு அருகாமையில் கடமையாற்றிக் கொண்டே வேறும் வெளிவருமானங்களை சொந்த உழைப்பினால் ஆக்கிக் கொண்டே சுகமாக வாழ்ந்து வருகுறீர் ” அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்யவேண்டாம் என கோரினர். நானும் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து சரி கண்டு தொடர்ந்து மேலும் 14 வருடங்கள் அரசாங்கத்தில் கடமையாற்ற விரும்பி இராஜினாமா செய்வதில்லை என.முடிவடுத்தேன்… “

மௌலவி எம்.யூ.எம். தாஸீன்

வாக்குறுதி அளித்த மேற்படி திகதியில் காலை 10 மணியளவில் ” நளீம் ஹாஜியார் அவர்களை வெள்ளவத்தை இல்லத்தில் சந்தித்து இராஜினாமா செய்யமுடியாதிருப்பதாகவும் ஜாமிஆவில் சேர முடியாது என்றும் உறுதிபட கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் அறிஞர் தாஸீன் அவர்களும் ஹாஜியார் அவர்களுடன் இருந்தார். இதனை செவியுற்ற , தனது செல்வத்தை சமூக நகர்விற்காக வாரிவழங்கிய வள்ளல் நளீம் ஹாஜியார் சொன்னார்கள். ( கடித வாசகங்கள் இதோ )

” புஹாரி ஹஸரத் ! எமக்கு அல்லாஹ் செல்வங்களைத் தந்திருக்கிறான். நாங்கள் அதனை அவன் பாதையில் செலவுசெய்கிறோம். உங்கள் போன்ற ஆலிம்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால் கியாமத்தில் அல்லாஹ்விடம் காட்டிக் கொடுத்து விடுவேன் ” என்று கூறினீர்கள். அந்தச் சொற்கள் இன்று வரை என் மணதில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன்.

பெரியீர்! தாங்கள் அவ்வாறு கூறியதால் இறைவனுக்கு அஞ்சி நடப்பது என்பதாலும். சிறு அளவிலாவது மார்க்க அறிவைப் படித்ததாலும் அதற்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தலை குனிந்த நிலைக்குட்பட்டேன். தாங்கள் அதன்பிறகு அதிபர் அவர்களையும் என்னையும் நல்லதொரு முடிவை தரும்படி கூறினீர்கள் . நாங்கள் பற்பல பிரச்சினைகளை இட்டு விவாதித்த பின் ஜாமிஆவில் சேர முடிவு செய்தோம். எனது முடிவை எனது குடும்பத்தினரும் நண்பர்களும் கேள்விப்பட்டதுமே அவர்களின் வெறுப்புக்கு ஆளானேன்.இன்னும் அவர்களது வெறுப்புக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக்கொண்டே இருக்கிறேன்…”

https://www.facebook.com/faisur.rahuman

தொடரும்

/Zan