எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 04

எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977)– 04

இஸட். . ஸன்ஹிர்  (1973)

குறிப்பு: இக்கட்டுரைத் தொடர் ஜாமிஆ நளீமிய்யா முதல் தொகுதி மாணவர் whatsapp குழுமத்தில் இடப்பட்டு கலந்துரையாடப்பட்ட பின்னர் puttalamonline இணையத்தளம் ஊடாகப் பதிவிடப்படுகின்றது.

 ஜாமிஆ நழீமிய்யா முதல் தொகுதி மாணவர்கள்

நேர்முகப் பரீட்சையில் தேறிய இருபத்தி எட்டு பேர் ஜாமிஆ நளீமிய்யாவில் கற்பதற்கான முதல் தொகுதி மாணவர்களாக தெரிவுசெய்யப்பட்டோம்.

சுட்டிலக்க ரீதியில் முதல் தொகுதி மாணவர்கள்:

 1. எம். ஜே. எம். முனவ்வர் (கம்மல்துறை, நீர்கொழும்பு)
 2. என். ஏ. ஹுசைன் (ஓலான, மாவனல்லை)
 3. ஏ. எப். எம். சுஹைப் (களுத்துறை)
 4. எம். என். எம். ஷபீக் (நாம்புளுவ, பஸ்யால)
 5. இஸட். ஏ. ஸன்ஹிர் (புத்தளம்)
 6. எம். எஸ். எம். நபீஸ் (வியங்கல்ல, களுத்துறை)
 7. வை. அபுல் பஷர் (புத்தளம்)
 8. எம். ஆர். எம். நவாப் (பம்மண்ண, குருநாகல்)
 9. எச். செய்யத் கிறாத் (ரொட்டவெவ, திருகோணமலை)
 10. எம். ஆர். எம். சுலைமான் (கஹட்டோவிட்ட)
 11. ஏ. சி. ஏ.  முஹியத்தீன் (பண்டாரகொஸ்வத்த, குருநாகல்)
 12. எம். ஏ. எம். மிம்தா (துந்துவை, பெந்தோட்டை)
 13. ஏ. முஹம்மது ஹனீபா (மூதூர்)
 14. எம். ஐ. ரஹீம் (மூதூர்)
 15. முஹம்மது அல்தாப் (புது தெரு,வெலிகம)
 16. ஏ. எம். நியாஸ் (தாராபுரம், மன்னார்)
 17. எம். மீரா லெப்பை (பானகமுவ, குருநாகல்)
 18. யூ. கே. எம். அப்துல்லாஹ் (காத்தான்குடி 02)
 19. எம். பஸ்லுர்ரஹ்மான் (புது தெரு,வெலிகம)
 20. எம். எம். எம். லியாஸ் (கினியம, சிலாபம்)
 21. எம். எஸ். எம். முனவ்வர் (புது தெரு,வெலிகம)
 22. ஏ. எம். அபுவர்தீன் (பதிங்கஸ்கொட்டுவ, மாத்தளை)
 23. ஐ. எ.ம் அஷ்ரப் (சாவகச்சேரி)
 24. எம். ஐ. எம். ஹுசைன் (தும்புளுவாவ, மாவனல்லை)
 25. எம். மஸாஹிம் (பெரியமடு, மன்னார்)
 26. எம். ஐ. எம். நியாஸ் (மடலகம, பொல்கஹவெல)
 27. ஜே. எம். உவைஸ் (கொழும்பு-2)
 28. எம். ஐ. எம். நதீர் (கொழும்பு-2)

இவர்களில் இருவர் ஆங்கில மொழி மூலம் கற்ற மாணவர்களாவர். இருவரும் கொழும்பு 02 ஐ சேர்ந்தோர். ஜே. எம். உவைஸ் (26), எம். ஐ. எம். நதீர் (27) ஆகியோரே அவர்கள். எம். ஐ. எம். அஷ்ரப் என்ற மாணவர் ஜாமிஆவுக்கு சமூகமளிக்கவே இல்லை. ஆகவே முதல் தொகுதி மாணவர்கள் இருபத்தி ஏழு பேராவர். எம். ஏ. எம். மிம்தா ஜாமிஆ தொங்கப்பட்டு ஒரு மாதத்தில் விடப்பட்ட நோன்பு விடுமுறைக்குப் பின்னர் சமூகமளிக்கவில்லை. அவரை நாம் நளீம் ஹாஜியாரின் ஜனாஸாவின் போது நளீமிய்யா வளாகத்தில் பின்னர் சந்தித்தோம்.

எம். எஸ். எம். நபீஸ் (06) ஜாமிஆவின் முதலாவது சிரேஷ்ட மாணவர் தலைவராவார். எமது அன்புக்குரிய தாபக அதிபர் மர்ஹூம் தாஸீன் மெளலவி அவர்களால் அப்போது அவர் தெரிவுசெய்யப்பட்டார். இன்று அவர் எம்மைவிட்டும் பிரிந்துவிட்டார். அவ்வாறே எச். செய்யத் கிறாத் அவர்களும் இலங்கையில் இனப்பிரச்சினை நடைபெற்ற காலப்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கை ஒன்றின்போது காலமானார். எம். எம். எம். லியாஸும் எம்மத்தியில் இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நல்லடியார்களில் இவர்களை சேர்ப்பதற்கும் ஜன்னத்துல் பிர்தவுஸை வழங்குவதற்கும் பிரார்த்திக்கிறோம்.

இன்னும் வரும்  …

 

 

1 thought on “எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 04

Comments are closed.