எம்மைப் பற்றி

Logo.JPEG

எமது நோக்கக் கூற்று 

சமூக மாற்றம் நோக்கிய ஒரு பயணம்

எமது பணிக் கூற்று 

புத்தளத்தின் மரபுரிமைகள், பாரம்பரியங்கள், விழுமியங்கள், சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றை ஊடக தர்மங்களைப் பேணி சர்வதேச மயப்படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தல்.

அறிமுகம்

அளவற்ற அருலாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றோம்.

புத்தளம் பிரதேசத்தை சர்வதேச மயப்படுத்தி  சமூக மாற்றத்தை நோக்கி ஆரம்பமாகிய  Puttalam Online இணையச் சஞ்சிகை, இன்று – 2015 பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி தனது பயணத்தில் நான்காம் வருடத்தினை பூர்த்தி செய்து, ஐந்தாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

Puttalam Online சமூக ஊடகம் புத்தளம் பிரதேசத்தின் இயற்கை வளம், வரலாற்றுத் தொன்மை, பண்பாடு, அரசியல், கல்வி, கலாசாரம், சுகாதாரம், கலை இலக்கிய முயற்சிகள், மக்கள் வாழ்க்கை, அவர்களது அன்றாட நிகழ்வுகள், அவர்கள் படைக்கும் சாதனைகள் அனுபவிக்கும்  துயரங்கள் மற்றும் அவலங்கள்… என பன்முக விடயப்பரப்புகளில் கவனம் செலுத்திவந்துள்ளது.

Puttalam Online இந்த நான்கு வருட காலப் பகுதிக்குள் பல மில்லியன் பேர் தரிசித்த பிராந்திய சமூக ஊடகம்  ஒன்றாக  சிறப்புற்று விளங்குகியுள்ளது. இவ்வாறு தரிசித்தவர்களில் 60% ஆனோர் வெளிநாடுகளில் வசிக்கும் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

புத்தளம் பிரதேசம் என நாம் கருதுவது கல்பிட்டி, கரைத்தீவு, புளிச்சாக்குளம், மதவாக்குளம், ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பினையாகும்.

நான்கு வருடங்களாக புத்தளம் பிரதேச விவகாரங்களை முன்னுரிமைப்படுத்தி செயற்பட்டுவந்த நாம், இனிமேல் இந்நாட்டின் அரசியல், சமூக, சமய, கலாசார பின்புலத்தில் தனது நோக்கெல்லையினை விசாலப் படுத்தி இலங்கையில் வாழும் சகல இன சமூகங்களினதும் குரலாக ஒலிப்பதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

Puttalam Online இணையத்தளம்  பதிவிடும் அனைத்து ஆக்கங்களுக்கும் அதன் நிர்வாகம் (Puttalam Online Team) பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. பதிவேற்றப்படும் ஆக்கங்களை படைத்தவர்களே அதற்கு பொறுப்பானவர்கள். பக்கசார்பாகவும் ஏனையோர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் அமையும் ஆக்கங்களில் தேவையான மாற்றங்களைச் செய்யும் அதிகாரம் இணையத்தளத்திற்கும் அதன் நிர்வாகத்திற்கும் உண்டு.

மேலும் எமது இணையத் தளத்திலுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளும்போது அல்லது மீள் பதிவு செய்யும்போது எமது பெயரை குறிப்பிட்டு பதிவு செய்தல் விரும்பத்தக்கது.

சமூக மாற்றம் நோக்கிய எமது பயணத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

எமது ஆலோசனைக் குழு

1. அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம் முசம்மில்

2. அஷ் ​​ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்

3. கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்

4. கலாபூஷணம் எம்.ஏ.எம்.ஜவாத் மரிக்கார்

5. பரிஸ்டர் எம்.எஸ். ரவூப் நிஸ்தார்

6. சிரேஷ்ட ஊடகவியலாளர்மர்லின் மரிக்கார்

7. ஊடகவியலாளர் எஸ்.ஏ.அஷ்கர் கான்

8. பொறியியலாளர் ரின்ஷாத் அஹ்மத்

Admin

M.I. Mohamed Rushdi

16.02.2015

 

Leave a Reply