ஒவ்வொரு வீட்டிலும் கல்விமான்களை உருவாக்குவதே தூரநோக்கு – இல்ஹாம் மரிக்கார்
(எம்.யூ.எம்.சனூன்)
பம்பலபிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மொழியியல் துறை, களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பதில் தலைவருமான பேராசிரியர்எஸ்.ஜே.யோகராஜா (PhD) கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி ஹல்ஹாரி நெத்ராஞ்ஞனி பிட்டிகல (PhD) (மூத்த விரிவுரையாளர் & ஆய்வுத்துறை மேற்பார்வையாளர KAATSU International University) கலாநிதி டபில்யூ ஏ. தேசபிரிய சாம் விஜெயதுங்க (சமாதான தூதுவர் Director General-SUNFO Global Federation) கலாநிதி டீ.விமலன் (கவுன்சில் உறுப்பினர் யாழ் பல்கலைகழகம்)
ஆர். உதயகுமார் (மாகாண பணிப்பாளர், கொழும்பு கல்வி பணிமனை) ருசைட் ஹபீப் (MBA), எம்.எஸ்.முரளிதரன் (SLEAS), ஆதம் மெத்வேதிவ் (University of Ukraine-Ukraine) இர்யான குஷ்னரோவா (University of Ukrain-Ukraine- Consultant amazon College), நடாலியா மொரசோவா(Financial Consultant-Russia Consultant-amazon College) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமேசன் கல்லூரியின் டிப்ளோமா பட்டதாரி மாணவர்களுக்கான பட்டமளிப்புடன் விரிவுரையாளர்கள், பங்குதார நிறுவனங்கள், அமேசன் கல்லூரியின் ஊழியர்களுக்கு விசேட நினைவுச்சின்னம் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்காரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 220 மாணவர்கள் பட்டத்தை பெற்றுக்கொண்டனர். இதில் ஆசிரியர் பயிற்சிநெறி, உளவியலும் உளவளத்துனணயும், தகவல் தொழிநுட்பம், கணக்கியல் போன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
வெறும் புத்தக கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே சுயவேலைத்திட்டங்கள், (Individual Project) பயிற்சி பட்டறைகள் (Practical Workshops), வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல் (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கைசாத்திட்டு மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்தி அனுப்புகின்றமை விசேட அம்சமாகும்.
எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறைகளுடன் தொடர்புடைய பாடநெறிகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்கபடவுள்ளதாக அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியாவசிய தேவையாக கருதப்படுகின்றது. கற்றவன் எந்த இடத்திற்கு சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்கு காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும்.
கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இவ்வாறு கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும்.
இப்படிப்பட்ட மகோன்னத துறையை தெரிவு செய்து தானும் இன்னும் கற்றுக்கொண்டிருப்பதாகவும்,
இவ்வாறான கல்வி துறைக்கு பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், ஒவ்வொரு வீட்டிலும் பல கல்விமான்கள், பட்டதாரிகளை உருவாக்குவது தனது தூரநோக்கு திட்டமெனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
WAK