ஓய்வு பெற்றார் தில்லையடியின் ஸலாஹுத்தீன் ஆசிரியர்

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஸலாஹுத்தீன் ஆசிரியர் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவரின் முதல் ஆசிரியர் நியமனம் 1985-07-02ம் திகதி கொ/ஹம்ஸா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் கிடைக்கப்பெற்றது. ஐந்து வருடங்களின் பின்னர் 1990-03-20 தொடக்கம் 1992-06-21 வரை மன்/புதுக்குடியிருப்பு பாடசாலையில் கடமையாற்றி 1992-06-22 தொடக்கம் 1993-10-12 வரை கொ/அல் நாஸர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமை புரிந்தார்…

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஸலாஹுத்தீன் ஆசிரியர் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவரின் முதல் ஆசிரியர் நியமனம் 1985-07-02ம் திகதி கொ/ஹம்ஸா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் கிடைக்கப்பெற்றது. ஐந்து வருடங்களின் பின்னர் 1990-03-20 தொடக்கம் 1992-06-21 வரை மன்/புதுக்குடியிருப்பு பாடசாலையில் கடமையாற்றி 1992-06-22 தொடக்கம் 1993-10-12 வரை கொ/அல் நாஸர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமை புரிந்தார்.

அதன் பின்னர் 1993-10-13 தொடக்கம் 2007-12-14 வரை பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், 2007-12-15 தொடக்கம் 2008-01-01 வரை பு/மணல்குன்று அல் அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் தமது கடமையை புரிந்தார்.

அதன் பின்னர் மீண்டும் 2008-01-02 தொடக்கம் 2016-04-26 வரை பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், 2016-04-27 தொடக்கம் 2018-03-31 வரை பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் தமது கடமையை புரிந்தார்.

பின்னர் 2018-04-01 பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயதிற்கு இடமாற்றம் பெற்ற அவர் 2021-09-18 வரை இப்பாடசாலையிலேயே கடமையாற்றி இளைப்பாறுகின்றார்.

36 வருட ஆசிரிய சேவையில் பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 25 வருடங்கள் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரிய நலன்புரி சங்கம்
பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்

WAK