கடின பந்து கிரிக்கட் போட்டியில் புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் வெற்றி

புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகத்திற்கும் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தினருக்குமிடையில் நடைபெற்ற 25 ஓவர்கள் கொண்ட கடின பந்து கிரிக்கட் …

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகத்திற்கும் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தினருக்குமிடையில் நடைபெற்ற 25 ஓவர்கள் கொண்ட கடின பந்து கிரிக்கட் போட்டியில் புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியானது அண்மையில் (20) புத்தளம் நாகாஸ் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நுரைச்சோலை அனல் மின்சார நிலைய கழகத்தினர் 8 விக்கட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லேகர்ஸ் அணியினர் 7 விக்கட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மைதானத்திற்கு துடுப்பாட வந்த லேகர்ஸ் கழக விக்கட் காப்பாளர் பர்சாத் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியினை வெற்றிப்பாதைக்கு இட்டு சென்றார்.

பர்சாத் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்று 9 விக்கட்டுகளை இழந்து 24.4 ஓவர்களில் லேகர்ஸ் அணியினர் 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.

லேகர்ஸ் அணியின் வீரர்களான பஸீலூன், முஜாஹிர் ஆகியோர் பர்சாத்துக்கு பக்க பலமாக செயல்பட்டனர்.