கண்டக்குளி பிரதேசத்தில் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

(எம்.யூ.எம்.சனூன்)

ல்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்டக்குளி பிரதேசத்தில் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பிரதேச பொது மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை அவரது காரியாலயத்தில் சந்தித்து தமது பிரதேசத்தில் பெருகிவரும் போதை பாவனை மற்றும் வியாபாரத்தை இல்லாதொழிக்க அல்லது கட்டுப்படுத்த ஆவண செய்யுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்றே இக்கூட்டம் இடம்பெற்றது.

பிரதேச கிறிஸ்தவ மதத்தலைவர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், கற்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர், கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரசன்னத்துடன் அப்பிரதேச மீனவ மற்றும் மாதர் சங்கங்களின் பங்கு பற்றுதலுடன் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் பிரதேசத்தில் போதை ஒழிப்பு சம்பந்தமான பல விடயங்கள் பேசப்பட்டு ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்த ஆவண செய்யப்பட்டன.

தமது வேண்டுகோளை ஏற்று கூட்டத்தை ஏற்பாடு செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு ஊர் மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

WAK