கத்தார் இலங்கை தூதரகத்தில் பிள்ளை பிறப்பை பதிவு செய்தல்

(வசீம் அக்ரம்)

த்தாரில் வசிக்கும் இலங்கையர்கள் பிள்ளை பிறப்பை இலங்கை தூதரகத்தில் எவ்வாறு பதிவு செய்தல் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

1. இலங்கை தூதரகத்தில் அல்லது இணையத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூரணப்படுத்தல் வேண்டும். (இரண்டு சாட்சியாளர்கள் கையொப்பம் இட வேண்டும்.)

2. வைத்தியலையில் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் பிரதி மூன்றினை (original + 3 photocopies) இணைக்கவேண்டும்.

3. பிரதேச செயலகத்தில் இருந்து சமீபத்தில் பெறப்பட்ட தாய், தந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் திருமண சான்றிதழ் பிரதி மூன்றினை (original + 3 photocopies) இலங்கையிலிருந்து பெற்று வைத்துக்கொள்ள வேண்டும்.

4. தாய், தந்தையின் கடவுச்சீட்டு மற்றும் விசா (original + 3 photocopies) வழங்க வேண்டும்.

5. பிள்ளையின் புகைப்படம்.

இதனோடு சேர்த்து கடவுச்சீட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு பிள்ளையின் புகைப்படம் ஒட்டப்பட்டு கருமபீடத்தில் கையளிக்கப்பட வேண்டும். விண்ணப்பித்த மறுநாள் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்படும்.

கொடுப்பனவுகள் அனைத்தும் செலுத்திய பிற்பாடு மஞ்சள் நிற படிவம் வழங்கப்படும். அதனை பாதுகாத்து வைத்திட வேண்டும். சுமார் 1-2 மாத இடைவெளியில் மஞ்சள் நிற படிவத்தை காண்பித்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். பிள்ளையின் குடியுரிமை சுமார் ஒன்பது மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு பெற்றுக்கொள்ளலாம்.

WAK