கத்தார் முகங்களில் (Faces of Qatar) புத்தளம் முகம் – 02

புத்தளம் நகர மண்ணின் மைந்தன் இஷாம் மரைக்கார் 2014 இல் தொழில் வாய்ப்பு தேடி கத்தார் சென்றார். அங்கு தொழில் கிடைக்கும் வரை அந்நாட்டில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் தன்னார்வமாக ஈடுபட்டார்.

கத்தார் முகங்களில் (Faces of Qatar) புத்தளம் முகம் 02

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

 

புத்தளம் நகர மண்ணின் மைந்தன் இஷாம் மரைக்கார் 2014 இல் தொழில் வாய்ப்பு தேடி கத்தார் சென்றார். அங்கு தொழில் கிடைக்கும் வரை அந்நாட்டில் இடம்பெறும் சில நிகழ்வுகளில்  தன்னார்வமாக (Volunteer) ஈடுபட்டார். தொழில் கிடைத்தபின்பும் இது தொடர்ந்தது. அவரின் இந்த தன்னார்வ பங்களிப்பு,  இரு கின்னஸ் பதிவுகளில் அவரின் பெயரும் இடம்பெற வழியேற்படுத்தியது. அதில் ஒன்று மிஷன் 20 என்ற தன்னார்வ நிறுவனம் நடத்திய The Biggest Smiley Face உருவாக்கியதில் பங்கேற்றமை. Ithanpothu 180 மற்றையது உலகில் அதிகூடிய அறக்கட்டளைப் பொருட்கள் (Charitable goods) சேகரிப்பில் ஈடுபட்டமை. இதற்காக அவருக்கு சான்றிதழ்களும் கிடைத்தன.

 

இந்த அனுபவங்களின் அடிப்படையில் Silent volunteers (அமைதித் தொண்டர் படையணி) என்ற அமைப்பொன்று இஷாம் மரைக்கார் அவர்களால் உருவாக்கப்பட்டது.புனித நோன்பு காலங்களில் நோன்பு துறக்கும் நேரம் வீதி சமிக்ஞைகளில் நின்று நோன்பாளிகளுக்கு உணவுகளை வழங்குதல், வெப்பம் அதிகமாக உள்ள காலங்களில் வீதியோரம் வேலைகளில் ஈடுபடும் தொழிலார்களுக்கு இலவசமாக குளிர்பானம் வழங்குதல் போன்றன சேவைகள் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டன. இச்சேவைகளில் இலங்கையர் மட்டுமன்றி வெளிநாட்டவரும் பங்கேற்கத்தொடங்கினர். பாலைவனப்பகுதியில் (singing sand dunes) சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

இச் சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெறும்போது 2014 ஆம் ஆண்டளவில் ஐ லவ் கத்தார் என்ற ஒரு அமைப்பு ஒரு விவரணப் படம் ஒன்றை தயாரித்தது. அதில் இவர்களின் முயற்சியை பாராட்டியதுடன் தன்னார்வ தொண்டர்களை ஒழுங்குபடுத்தி அவர்களை  ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கில் அதனை கத்தார் அமைச்சுகளுக்கு வழங்கியது.

 

இஷாம் மரைக்கார் ஆரம்பித்த  அமைதித் தொண்டர் படையணியினரின் சேவைகள் தொடந்தன. ஒருமுறை தொண்டர் சேவைக்காக கலந்துகொண்ட கனடா நாட்டு பெண்மணியொருவர் கடற்கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான ஆலோசனை ஒன்றை முன்வைத்தார். அதனடிப்படையில் அமைதித் தொண்டர் படையணியுடன் இணைந்த  கத்தார் சுற்றுச்சூழல் செயற்திட்டம் என்ற பெயரில் கடற்கரையோர சுத்திகரிப்பு  சேவை ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாள்  சுமார் 60 பேர் அதில் கலந்துகொண்டனர். அவர்களில் பத்துபேர் தெரிவுசெய்யப்பட்டு Doha Environmental Action project என்ற செயற்திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.

 

இந்த அமைப்பினால் ஒவ்வொரு வெள்ளியன்றும் விடுமுறையின்போது கடற்கரை, பாலைவனம் போன்றவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அறிவிப்பு இணையம், சமூக வலைத்தளங்கள் மூலம் விடுக்கப்படும். விரும்பியோர் ஓரிடத்தில் ஒன்றுகூடுவர். அவர்கள் தேவையான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு சேவைகளில் ஈடுபடுவர். இதில் கலந்து கொண்ட இலங்கையர் குறைவே. இச் சேவை இன்றுவரை நடைபெறுகின்றது.

 

சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோருக்கு கத்தாரில் ‘Qatar sustainability week’ என்ற ஒரு விருது தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது. Doha Environmental Action project அமைப்புக்கு ஒரு சிறிய வேலைத்திட்டத்துக்காக ஒரு விருது இல் 2015 இல் கிடைத்தது. அதன்மூலம் இந்த அமைப்பு பிரபலமானது. கத்தார் அமீரின் தாயார் மூஸா பின்த் நாசர் அல் மிஸ்னத், அரசரின் சகோதரி ஹிந்த் பின்த் ஹமாத் அல் தானி (CEO Qatar Foundation), கத்தார் நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சர் ஆகியோரும் சமூகமளித்து ஊக்குவிப்பு வழங்கினர்.

இன்னும் வரும் …

/ Zan