கந்தசாமி ஆசிரியருக்கு அஞ்சலி -மா. நாகராஜா, முன்னாள் அதிபர், பு/ இந்துக் கல்லூரி

நண்பரே… உன்பணி உன்னதமானது..!
நீர் கற்பித்த மாணவர்பரம்பரை உந்தன் பெயரை என்றும் நினைவுகொள்ளும்…!!
அமைதியாக போய் வாருங்கள்….!!!

 கந்தசாமி ஆசிரியருக்கு அஞ்சலி
மா. நாகராஜா, அதிபர், பு/ இந்துக் கல்லூரி  
************************************
வடமாராட்சி மண்ணின் வீரிய விதையொன்று
புத்தளம் நகரில் விசாலித்த ஆலமரமாய் விஞ்ஞான ஆசிரியராய்
விரிந்த தனிமரத் தோப்பாக ஆளுமை அதிகாரம் கொண்ட ஒருவர்
மீளாத்துயிலில் அமைதியானார்.

புத்தளம் சாகிரா தேசிய கல்லூரியின்
கல்வியையும் ஒழுக்க விழுமியங்களையும்
சமயம் கடந்த ஆசானாக கட்டிக்காத்த ஓர் ஒற்றை மனிதன் உயிர் துறந்து போனான்.

ஆயிரக்கணக்கான மாணவர்களின் இதயத்தை வென்ற ஆசிரியர்அவர்.
எப்போதும் எங்கும் தூய வெண்ணிற ஆடையுடன் போதனை செய்த தூயவன்.
மிகுந்த கண்டிப்பிற்கும் கனிந்த மனதிற்கும் சொந்தக்காரர்.

விஞ்ஞானம், கணிதம் என்ற இருபாடங்களுக்கு அப்பால் மாணவர்களின்
சுய ஆளுமை வளர்ச்சியில் கரிசனை கொண்ட உளவியலாளன்.
ஆசிரியத்துவத்தின் பன்முகத்தோற்றம் கொண்ட பண்பாளர்.

எப்போதும் இயல்பாகவே சிவந்த அவர் விழிகள்

செம்மையான உபதேசங்களையே நகைச்சுவையூடாக
வாரியிறைக்கும் வள்ளல்.

புத்தளம் மக்கள் ஆளுமையுடன், ஆற்றல்மிகுந்த ஆசிரியர்களை
எப்போதும் கண்ணியப்படுத்தும்
அவ்வகையில் அமரத்துவம் அடைந்த கந்தசாமி ஆசான்
மீது பெருமதிப்பு கொண்டுள்ள அறிவார்ந்த சமூகமாகும்.

நண்பரே… உன்பணி உன்னதமானது..!
நீர் கற்பித்த மாணவர்பரம்பரை உந்தன் பெயரை என்றும் நினைவுகொள்ளும்…!!
அமைதியாக போய் வாருங்கள்….!!!