கந்தசாமி ஆசிரியர் காலமானார்

பாடசாலை இல்லவிளையாட்டுப் போட்டிகளில் அவர் காட்டிய ஆர்வம் என்றென்றும் மாணவர் மனத்தை விட்டு அகலாது. பாடசாலையில் அவர் மாணவர் போன்று வெள்ளை நிற சீருடையுடனேயே என்றும் என்றும் வலம் வருவார். 1949 செப்டம்பர் 29ம் திகதி பிறந்த இவர் தனது 71 வயதில் இன்று மாலை இயற்கை எய்தினார். பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தபின்னர் இவருக்கு பேராதனை பல்கலைகழகத்தில் விவசாயத்துறை பட்டப்படிப்புக்கு தெரிவானார். அங்கிருக்கும்போதே மன்னாரில் ஆசிரியராக நியமனமும் கிடைக்க…

ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியர் கந்தசாமி காலமானார்

ஸாஹிரா தேசிய கல்லூரியின் முன்னைய நாள் விஞ்ஞான பாட ஆசிரியரும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனம் கவர்ந்தவருமான மூத்த ஆசிரியர் கிட்டினன் கந்தசாமி காலமானார்.

1949 செப்டம்பர் 29ம் திகதி பிறந்த இவர் தனது 71 வயதில் இன்று மாலை இயற்கை எய்தினார். பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தபின்னர் இவருக்கு பேராதனை பல்கலைகழகத்தில் விவசாயத்துறை பட்டப்படிப்புக்கு தெரிவானார். அங்கிருக்கும்போதே மன்னாரில் ஆசிரியராக நியமனமும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆசிரியத் தொழிலை தெரிவு செய்வதன் மூலம் சமூகத்துக்கு சேவை செய்ய முடியும் எனும் நோக்கில் நியமனத்தை ஏற்றார்.

 

பின்னர் பலாலி ஆசிரிய பயிற்சி கல்லூரியில் பயிற்சியினை நிறைவு செய்து முதலில் புத்தளம் சாந்த மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் சேவையை ஆரம்பித்தார். பின்னர் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடம் மாற்றலாகி உள்ளார். கடைசிவரை அவரது சேவை அங்கு தொடர்ந்தது.

இவரது ஐந்து வயதில் அம்மா மரணம் அடைய இவருடன் சேர்த்து உடன்பிறந்த ஐந்து சகோதர சகோதரிகளையும் அப்பா மறுமணம் முடிக்காமல் வளர்த்துள்ளார். இவர் புத்தளத்திற்கு வந்த பிறகு ‘விஜயதசமி’ தினத்தன்று நிறைய பிள்ளைகளுக்கு ‘ஏடு தொடங்குதல்’ வைபவத்தை முன்னின்று நடத்தியுள்ளமையை பலர் இன்றும் நினைவுகூருகின்றனர்.

புத்தளத்திலுள்ள ஆசிரியர்களில் பிரபலமானவரான இவர் மாணவர்கள், பெற்றோர்களிடையே மிகுந்த நெருக்கத்தை பேணி அவர்களில் கற்றல், ஒழுக்க விடயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். மேலும் பாடசாலை இல்லவிளையாட்டுப் போட்டிகளில் அவர் காட்டிய ஆர்வம் என்றென்றும் மாணவர் மனத்தை விட்டு அகலாது. பாடசாலையில் அவர் மாணவர் போன்று வெள்ளை நிற சீருடையுடனேயே என்றும் என்றும் வலம் வருவார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட கந்தசாமி ஆசிரியர் புத்தளத்தை அதிகமாக நேசித்தார். அதேவேளை புத்தளம் மக்களும் இவரை கடைசிவரை மறக்கவில்லை. இவர் நோய்வாய்ப்பட்ட போது இவரிடம் கற்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உட்பட எல்லா மாணவர்களும் இறுதிவரை இவரை தமது தந்தையை போன்று கரிசனையோடு உறவுகொண்டமை இவரின் மீதான நேசத்தை பறைசாற்றியது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கந்தசாமி சேர் புத்தளத்தை தனது சொந்த ஊராக வரித்துக்கொண்டு இங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.

/Zan

2 thoughts on “கந்தசாமி ஆசிரியர் காலமானார்

Comments are closed.