கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிலாஸ்டிக் கதிரைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு

கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிலாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு அன்மையில் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும்…

-றிம்சி ஜலீல்-

கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிலாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு அன்மையில் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் இடம்பெற்றது.
 இந்த நிகழ்வின் போது கல்கமுவ வன்னிக்குடாவெவ பகுதி பள்ளி நிர்வாகிகளையும் அப்பிரதேச மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது தேவைகளையும் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டர்.

மேலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக செய்ய வேண்டிய எதிர்காலத் திட்டங்களினையும் அபிவிருத்தி சம்பந்தமான விடையங்களினையும் அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான தீர்வினை வெகுவிரைவில் பெற்றுத்தருவதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேசசபை பிரதித்தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஸபீர், கல்கமுவ தொகுதி அமைப்பாளர் அல்-ஹாஜ் பத்ர், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட கல்விப்பிரிவு ரியாஸ் (அஸ்ஹரி) , முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான இம்ரான் கான், கல்கமுவ பாடசாலையின் செயலாளர் அன்பாஸ், வன்னிகுடாவெவ பள்ளி நிருவாகசபை உறுப்பினர்கள், மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.