கல்பிட்டியில் அட்டை பாசி வளர்ப்பு தொடர்பாக ஆராய்வு

ணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தின் முன்னேற்ற ஆய்வு கூட்டம் அண்மையில் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம், அமைச்சின் உயர் அதிகாரிகள், கல்பிட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அரச ஸ்தாபனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கடந்த மூன்று மாதங்களில் உணவு பாதுகாப்பு சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டன.

இதில் ஓர் அங்கமாக கல்பிட்டியில் உள்ள தீவுகளில் ஒன்றான பரமுனை தீவில் நடைமுறைப்படுத்தப்படும் அட்டை பாசி வளர்ப்பு சம்பந்தமான வேலை திட்டத்தையும் மேற்பார்வை செய்து மற்ற தீவுகளிலும் இது சம்பந்தமான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது பற்றி விரிவாக ஆராய்ந்தனர்.

WAK