குறைக்கப்பட்ட வரி – தொலைபேசி கட்டண பட்டியலில் இடம்பெற்றுள்ளதா?

தொலைபேசிக்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் தமது தொலைபேசி பட்டியல் கட்டணத்தில் சரியாக குறிப்பிடப்படாது…

தொலைபேசிக்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் தமது தொலைபேசி பட்டியல் கட்டணத்தில் சரியாக குறிப்பிடப்படாது இருந்தால் அது குறித்து தெரிவிக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் குழு தொலைபேசி பாவனையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுவான தொலைபேசிக் கட்டணத்துக்கு இதுவரையில் 37.7 சதவீத வரி அறவிடப்பட்டது. இத் தொகை தற்போது 22.6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் இந்திரஜித் ஹந்த பாண்கொட தெரிவித்தார்.