குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

(எம்.யூ.எம்.சனூன்)

மிகவும் குறைந்த வருமானத்தை கொண்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்று (29-03-2023) புத்தளம் ரத்மல்யாய சமூக அபிவிருத்தி காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளம் நகர், புத்தளம் குருசடி மற்றும் ரத்மல்யாய ஆகிய பகுதிகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. 37 உணவு பொதிகளுக்கான நிதியுதவியினை லைலா உம்மா டீன் பவுண்டேசனும், 63 பொதிகளுக்கான நிதியுதவியினை தனிநபர்கள் சிலரும் வழங்கி இருந்தனர்.

இதற்காக நிதியுதவி வழங்கிய ஹரிஸ்டீன் உட்பட அனைத்து சகோதரர்களுக்கும் புத்தளம் ஆதிப் பவுண்டேசன் தலைவர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது ஆதிப் பவுண்டேசன் மாணவர் குழுவினர் சார்பாக மாணவன் எம்.எச். ஆதிப் அஹ்மத், தொண்டர்களான ஏ.எஸ்.எம். நியாமில், எம்.ஜௌசி மற்றும் குருசடி அல் அமீன் பள்ளி தலைவர் முஹம்மது ஜனாப் ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை பகிர்ந்தளித்தனர்.

WAK