“கெயார் அன்ட் செயார்” அமைப்பினரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் நகரில் இயங்கி வரும் பெண்கள் சமூக சேவை அமைப்பான “கெயார் அன்ட் செயார்” அமைப்பினரால் விதவைகள், விஷேட தேவையுடையவர்கள் மற்றும் குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு இலவசமாக உலர் உணவு பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் “கெயார் அன்ட் செயார்” அமைப்பின் காரியாலயத்தில் வைத்து அதன் ஸ்தாபக தலைவி பாத்திமா ஹஸாரா ஹனிபா இனாஸ் தலைமையில் குறித்த பயனாளிகளுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தலா 5000 ரூபா பெறுமதியான 112 பொதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. விதவை தாய்மார்களுக்கு மாதாந்த நிதி உதவிகளையும் கெயார் அன்ட் செயார் அமைப்பினர் தொடராக வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

WAK