கொவிட் 19 கால சித்திரங்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு

புத்தளம் மாவட்ட செயலகத்துடன் இணைந்து புத்தளம் ப்ரெண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இந்த சித்திரம் வரையும் போட்டிதனை ஏற்பாடு செய்திருந்தது.

ரூஸி சனூன் புத்தளம்

கொவிட் 19  வைரஸ் தாக்கம் காரணமாக நீண்டகால விடுமுறையின் போது வீடுகளில் தங்கியிருந்த மாணவர்களுக்கிடையே நடைபெற்ற சித்திரம் வரையும் போட்டிகளில் பங்குபற்றி, சித்திரங்களை வரைந்த மாணவர்களின் சித்திரங்களை தெரிவு செய்கின்ற நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட செயலகத்துடன் இணைந்து புத்தளம் ப்ரெண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இந்த சித்திரம் வரையும் போட்டிதனை ஏற்பாடு செய்திருந்தது.

வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்தும், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்தும் மொத்தமாக 25 கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் இந்த சித்திரப் போட்டியில் பங்கெடுத்தார்கள்.

“சிறுவர் பாதுகாப்புக்கான பங்களிப்பு மற்றும் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த சித்திரம் வரைதல் போட்டி “போதைப் பொருள் அற்ற குடும்பம்” மற்றும் “சூழலை பாதுகாப்போம்” எனும் தலைப்பில் வழங்கப்பட்டிருந்தன.

மொத்தமாக வரையப்பட்ட 370 சித்திரங்களே இவ்வாறு தெரிவு செய்யும் படலத்தில் உள்வாங்கப்பட்டிருந்தன.

புத்தளம் வலய கல்வி பணிமனையின் சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் கலாநிதி எம்.எம்.முஹம்மது தலைமையில் நடைபெற்ற சித்திரங்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் புத்தளம் மாவட்ட சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் எச்.எம்.பி. சிரியாணி, ஆசிரிய ஆலோசகர் எம்.என்.எம்.இன்சாப் முகம்மது, புத்தளம் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ரைஷா, ப்ரண்ட்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.எப்.சுபியானி ஆகியோர் பங்கேற்றனர்.