கோவிட் 19 – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

கோவிட் 19 ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை தற்போது எட்டி இருப்பதாகவும் “உலகம் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. வீட்டில் இருப்பதால் அதிகமான மக்கள் சோர்வடைந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பல நாடுகளும் தமது சமூக மற்றும் பொருளாதாரத்தை திறப்பதில் ஆர்வம் காட்டுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வைரஸ் இன்னும் வேகமாக பரவுகிறது. இன்னும் அது உயிராபத்துக் கொண்டது என்பதோடு பெரும்பாலான மக்கள் இன்னும் எளிதாக பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். நோய்த்தொற்றுச் சம்பவங்கள் உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில் நாடுகள் மற்றும் மக்கள் தொடர்ந்தும் தீவிர விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேகஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை ஒன்பது மில்லியனை நெருங்கியிருப்பதோடு உயிரிழப்பு நான்கரை இலட்சத்தை தாண்டியுள்ளது.