சாஹிராவில் மாபெரும் திறந்தவெளி கலைவிழா

“களைப்பில்லா கல்விக்கு கலையுடனான ஆரம்பம்'” என்ற தொனிப்பொருளில் சாஹிரா வரலாற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு “கலை ஏந்தும் சாஹிரா ” நிகழ்வுகள் அதிபர் ஐ.எம்.நஜீம் தலைமையில் நேற்று முன்தினம் (16-09-2022) சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றன.
.
மாணவர் தலைவர் குழுவினால் ஏற்பாடாகியிருந்த மாபெரும் திறந்தவெளி கலைவிழாவில் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக ரனீஸ் பதூர்தீன் பர்வின் ராஜா, ஜௌபர் மரைக்கார், அஸ்கின் மற்றும் ஜெமீனா இல்யாஸ் உட்பட ஏனைய அதிதிகளும் கலந்துகொண்டனர்.
.
நிகழ்வை ஆரம்பித்து வைத்து அதிபர் உரையாற்றுகையில் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் ஆகியோரின் பொருள் நிதி மற்றும் சேவைகள் ஊடான பாடசாலை அபிவிருத்திகளுக்கான பங்களிப்புக்களை குறிப்பிட்டதுடன் ஏனைய உறுப்பினர்களினதும் நகரசபையின் ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்தார்.
.
நள்ளிரவுவரை நீடித்த கலைநிகழ்வுகளில் பெருந்திரளான மாணவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
.
WAK