சாஹிரா ஆரம்ப பாடசாலையின் உள்ளக வீதி திறந்து வைப்பு

கரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் அவர்களின் பிரதான நிதி அனுசரனையுடன் நகரசபை உறுப்பினர்கள் பர்வின் ராஜா ஆரிப் சிஹான் மற்றும் சகோதரர் ஹம்தான் ஆகியோரின் இணை அனுசரனையுடனும் மழை காலத்தில் சேறும் சகதியுமாகக் காணப்பட்ட பாடசாலை பின் பகுதி நுழைவாயிலிலிருந்து வகுப்பறைகளுக்குச் செல்லும் பகுதிக்கான உள்ளகப் பாதை அமைக்கப்பட்டு நேற்று (20-09-2022) அதிதிகளால் அதிபர் ஜவாத் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நிர்மாணப் பணிகள் நடைபெற்றவேளை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின்போது Pulsed அமைப்பினரும் பகுதியளவில் இதற்குப் பங்களிப்பு நல்கியிருந்தனர்.
.
திறப்பு விழாவைத் தொடர்ந்து அதிதிகள் பாடசாலையின் விஷேட கல்வி மதிப்பீட்டு வள நிலையப் பிரிவைப் பார்வையிட்டு அங்குள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்ததுடன் அவற்றை விரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் அதிபரிடம் தெரிவித்தார்.
.
நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் பல பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து குறைநிறைகளைக் கேட்டறிந்து தமது பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும்தொடர்ந்தும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
.
WAK