சாஹிரா ஆரம்ப பாடசாலையில் கொங்ரீட் பாதை அமைக்கும் பணி ஆரம்பம்

(PULSED Media)
சாஹிரா ஆரம்ப பாடசாலையின் பின் புறமுள்ள நுழைவாயிலை மழை காலங்களில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பயன்படுத்திவருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.
இதற்கான ஒரு கொங்ரீட் பாதையை அமைக்கும் முயற்சியை பாடசாலை நிர்வாகம் முயற்சி செய்து வருகையில் எம்மிடமும் இதற்கான பங்களிப்பொன்றிற்கு கோரிக்கையை ஒன்றை முன்வைத்தது. அதற்கமைய, எமது அமைப்பு அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்ததோடு எமது அங்கத்தவரான சகோ.அஷ்ரப்தீனின் நிறுவனமான JH Constructions & Renovations நிறுவனத்தினூடாக கட்டுமான வேலைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், இக்கட்டுமான வேலைக்கு தேவையான ஆள் மற்றும் பொருட்தேவைகளுக்கான செலவீனங்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஒத்துழைப்புடன் எமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் முதற்கட்டமாக, சுமார் நூறு அடி நீளமான இப்பாதைக்காக எமது Batch அங்கத்தவர்களின் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்ட 10 சீமெந்து பைக்கற்றுகளுக்கான கொடுப்பனவு அதிபரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இப்பணி இலகுவாக நடந்தேறி விரைவில் பலரும் பயன்பெற இறைவனை இறைஞ்சுவதோடு, இப்பணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது பங்களிப்புகளை வழங்கி வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவான கூலியை வழங்கிட பிரார்த்திக்கிறோம்.
WAK