சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை பெற்றார் மர்லின் மரிக்கார்

லங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா கடந்த 13 ஆம் திகதி மவுன்ட் லெவினியா பீச் ஹோட்டலில் நடைபெற்றன.
.
இவ்விழாவில் மதுரங்குளி விருதோடை கிராமத்தை சேர்ந்த தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஊடகவியலாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.புத்தளம் மண்ணுக்கும் தமிழ் பேசும் சமூகங்களுக்கும் கௌரவத்துடன் கூடிய பெருமைக்குரிய விடயமாகும்.
.
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் அண்மையில் தமிழகத்தின் ஐந்து அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பல் துறை சாதனையாளர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் திட்டத்தின் கீழ் “மைச்சுடர் மாமணி சக்ரா விருது”வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒரே ஒரு இலங்கை ஊடகவியலாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
WAK