சிறப்புற இடம்பெற்ற அமைதித் தொண்டர்களின் FEED THE POOR – COINS FOR LIFE நிகழ்வு

உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய விடயங்களில் பின்தங்கி அடிமட்டத்தில் இருக்கும் எம் மக்களுக்கு உதவும் முகமாக சமூக நலன் கருதி…

உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய விடயங்களில் பின்தங்கி அடிமட்டத்தில் இருக்கும் எம் மக்களுக்கு உதவும் முகமாக சமூக நலன் கருதி Silent Volunteer Girls Wing  அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட உதவி கரங்களை ஒன்று சேர்ப்பதற்கான முதற்கட்டமாக FEED THE POOR எனும் தலைப்பின் கீழ் COINS FOR LIFE எனும் கருவை மையமாகக் கொண்ட நிகழ்வு 2017 நவம்பர் மாதம் 12ம் திகதி அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை புத்தளம் நூஹ்மான் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்,

மேலும் #மருதாணி அலங்காரம் (Mehandi)
#முகப்பூச்சு அலங்காரம்(Face painting)
#உணவு வகைகள்(Food items)
#உடனடி பழரசம்(Fresh fruit juice)
#துரித உணவுகள்(Fast food)
#கிராமிய உணவுகள்(Gamae kade)
#விற்பனை தாவரங்கள்(Natural plants)
#மட்பாண்ட பொருட்கள்(Pottery items)
#கைப்பணிப் பொருட்கள்(Handmade items)
#அழகு சாதனப் பொருட்கள்(Cosmetics)
#அலங்காரப் பொருட்கள்(Fancy items)
#ஆடை அணிகள்(Woman’s clothing)

போன்ற விற்பனைக் கண்காட்சிகளும் இடம் பெற்றதோடு முப்பரிமாண அறை(3D Room), சிறுவர் விளையாட்டு பகுதி (Kids play area) விளையாட்டு நிகழ்வுகள் (Game shows) போன்றனவும் இடம் பெற்றன.

முற்றிலும் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமாக இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

-Fathima Shafra-