சேவையை ஆரம்பித்தது புத்தளம் ஜனாஸா வாகனம்

புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்லும் வாகனம், ஊர் மக்களுக்கு அதன் சேவையை நேற்று திங்கட்கிழமை மாலை 4:45 மணியளவில் புத்தளம் பகா பள்ளிவாசலில் வைத்து உத்தியோகப் பூர்வமாகத் தொடக்கி வைத்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இவ்வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்களும், மஸ்ஜித் பகா தலைவர், செயலாளர், மற்றும் பெரிய பள்ளி உப தலைவர் ஆகியோர்கள் பங்கேற்றனர்…

புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்லும் வாகனம், ஊர் மக்களுக்கு அதன் சேவையை நேற்று திங்கட்கிழமை மாலை 4:45 மணியளவில் புத்தளம் பகா பள்ளிவாசலில் வைத்து உத்தியோகப் பூர்வமாகத் தொடக்கி வைத்தது.
.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இவ்வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்களும், மஸ்ஜித் பகா தலைவர், செயலாளர், மற்றும் பெரிய பள்ளி உப தலைவர் ஆகியோர்கள் பங்கேற்றனர்.
.
இவ்வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த எமது ஊர் வாழ் மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் எமது ஊர் மக்களுக்கும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், பங்களிப்புச் செய்த குழுவினருக்கும் எமது சங்கத்தின் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜஸாகுமுள்ளாஹு ஹைறன்!
.
இன்ஷா அள்ளாஹ்! புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால், எதிர்வரும் காலங்களில் பல சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன. அதற்காக உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
.
இவ்வாகனம் புத்தளம் நகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடும் போது இலவசமாகவும், தூர இடங்களுக்குச் சேவையில் ஈடுபடும்போது கட்டணம் அறவிடப்பட்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
.
இக்கட்டணம் வாகனப் பராமரிப்பு மற்றும் தாபன செலவிற்காகவும் பயன்படுத்தப்படும். இச்சங்கத்தின் சேவை மென்மேலும் விருத்தியடைய அள்ளாஹ் அருள்புரிவானாக!
.
WAK