சோஷியல் அணி “பீல்ட் கேம் செம்பியனாக தெரிவு

புத்தளம் சவீவபுரம் கரப்பந்தாட்ட மைதானத்தில் 20 அணிகளுக்கு இடையிலான Feild Game கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி சிறப்பாக…

புத்தளம் சவீவபுரம் கரப்பந்தாட்ட மைதானத்தில் 20 அணிகளுக்கு இடையிலான Feild Game கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி சிறப்பாக முடிவடைந்தது.
.
களத்தில் அணிக்கு ஐவர் விளையாடும் புத்தளம் பிரதேசத்துக்கே உரித்தான கரப்பாந்தாட்ட தெரிவு போட்டிகள் தொடர்ச்சியாக நான்கு இரவுகளாக நடைபெற்று விறுவிறுப்பான இறுதி போட்டிகளோடு சோஷியல் அணி “பீல்டு கேம் செம்பியன்” வென்றது.
.
சோஷியல் கரப்பந்தாட்ட கழகத்தின் மூத்த பொறுப்பாளர் முளப்பர் நடுவர்களுக்கான நன்றி சின்னங்களையும், இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்ட லயன்ஸ் க்ளப் அணிக்கான கிண்ணத்தை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் நசீப் அவர்களாலும் வெற்றிக் கேடயத்தை சோஷியல் கழக மூத்த சிரேஷ்ட கரப்பந்தாட்ட வீரர் நியாஸ் அவர்களாலும் வழங்கிவைக்கப்பட்டது.
.
WAK