ஜனாஸா அறிவித்தல் – சபீதா உம்மா வபாத்தானார்

(Muhammad Muhsin)
.
ன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். புத்தளம் நூர்பள்ளி மஹல்லாவில் வசித்து வந்த சபீதா உம்மா அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.
.
அன்னார் புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹும் ஆப்தீன் சேர் அவர்களின் மனைவியும், ஓய்வுபெற்ற அதிபர் மர்ஹும் ஹனிபா, முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்ஹும் சாஜஹான் ஆகியோரின் சகோதரியும், புத்தளம் வலயகல்வி பணிமனையின் ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் சன்ஹிர், மும்தாஜ், புத்தளம் உப்பு நலன்புரிச் சங்கத்தின் முகாமையாளர் ரஸ்மி ஆகியோரின் தாயாரும், புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கொசாமா பேக்கரி உரிமையாளர் ஜவாஹிர் அவர்களின் மாமியாரும் ஆவார்.
.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்! இன்று (07-02-2023) செவ்வாய்க் கிழமை ழுஹர் தொழுகையுடன் புத்தளம் பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
தகவல் – சன்ஹிர் ஆசிரியர் (மகன்)
.
WAK