ஜனாஸா எரிப்பு – 6

(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்)

Prof. M.S.M. Anas

 

மன்னித்துவிடு

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புப்போராட்டம் தொடர்கிறது. தீர்வுகள் விரைவாக எட்டப்பட வேண்டும். பொறுமை,விவேகம், பேச்சுவார்த்தை இவற்றால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது. ஜனநாயக ரீதியில் இப்பிரச்சினையைக் கையாள வேண்டும் என்பது தான் முஸ்லிம்களின் நிலைப்பாடு. அரசாங்கம் முஸ்லிம்களுடன் தீர்க்காமான பேச்சுவார்த்தைகளுக்கு இடமளித்திருக்க வேண்டும். அவை முறையாக நடக்க வில்லை.

எரிப்பில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். வயது, பிரதேசம், எண்ணிக்கை, குடும்பம் எனப் பல விஷயங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. எங்கு குமுறல் எழும் என்பதைச் சொல்ல முடியாது . விஞ்ஞான முடிவுகளை ஏற்றுக்கொள்ள முஸ்லிம்களிடம் தடைகள் இருக்கவில்லை. இனவாத அரசியலால், அதிகாரிகளின் அர்த்தமற்ற கெடுபிடிகளால் தாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பது தான் முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. அதற்குக் காரணங்களும் இருந்தன.

முஸ்லிம்கள் மீதான வெறுப்பரசியல் உச்சத்தில் இருந்தபோதுதான் அரசாங்கத்தின் இந்த முடிவு முஸ்லிம்கள்மீது திணிக்கப்படுறது. இது குறித்து விஞ்ஞானிகளோ பொறுப்புள்ள அரசியல் தலைவர்களோ எதுவும் பேசவில்லை. குற்றேவல் புரியும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகளும் நாட்டில் இனவாதத்தைக் கக்கும் அரசசார்பு ஊடகங்களும் சிலஅடிப்படைவாத பிக்குகளும்தான் விஞ்ஞானம் பேசினர், வாதம் புரிந்தனர். ஒரு நாடு ஒரு சட்டம் அதை மாற்ற இடமளிக்க மாட்டோம் என்று நியாயம் பேசினர்.

/Zan