ஜாமிஆ நளீமிய்யாவின் “ஆசிரியத் தந்தை” புஹாரி மெளலவி – 04

(29 November  1930 / 29  November 2020 (  “தந்தை” தொடரின் இறுதிப் பகுதி – 4/4)

(மகன் பைசுர் ரஹ்மான்)

தந்தை / பாராட்டு

“ஜாமிஆ நளீமிய்யா பட்தாரிகளின் பன்முக ஆளுமை உருவாக்கத்தில்  பாரிய பங்களிப்பபை வழங்கிய சமூகத் தியாகி புகாரி மௌலவி ( அல் மன்பஈ) அவர்கள் கடந்த ரமழான் மாதம் 25/9/2008 அன்று  பிறந்தகம் புத்தளத்தில் வபாத்தானார்கள். நளீமியாக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அன்னாருக்கு செலுத்தும்  நன்றிக் கடனாகவும் நினைவாகவும் இக்கட்டுரை பிரசுரிக்ப்படுகிறது “. (இஸ்லாமிய சிந்தனை  ஒக்டோபர் – டிசெம்பர் 2008 , இதழ் 117),   “நளீமீக்களின் அறிவாளுமைக்கு அடித்தளமிட்ட ஆசான் மர்ஹூம் மெளலவி புஹாரி ”  எனும் மகுடமிட்ட கட்டுரைக்கு  இதழ் ஆசிரியர் As shaik  Dr. P.M.M.  Irfan (Ph.d),  Naleemi) அவர்கள் எழுதிய முற்குறிப்பு)

“You make me cry. Buhary sir was my teacher since I joint Jamiah. I have no words to describe his sacrifice towards Jamiah. May Allah reward him with highest paradise. ” (Seyed Aroos Shreeifdeen) As shiek Dr.  Seyed  Aroos Sherifdeen (Ph.d), (Naleemi) Lives Melboroum , Australia ) comment on my post ” தந்தை/ மர்மங்கள் ” 2020./11/20)

ஒருவர் புகழப்பட (பாராட்டு) வேண்டுமென்றால் முதல் நிபந்தனை அவர் மரணித்திருக்க வேண்டும் என பொதுவாக  சொல்வார்கள். ஆயினும் தந்தை அவர்கள் ஆரோக்கயமும் தெளிவும் உள்ள நிலையில் ஜாமில் நளீமிய்யாவில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில்  நளீமிய்யா மாணவர்களால் பாராட்டப்பட்டவர்களில் ஒருவர்.  எழுதப்பட்ட கடிதங்கள் வழங்கப்பட்ட வாழ்த்துக் கவிதை என்பன என்பன இதனை உறுதிப்படுத்துகின்றன. இவை  எவ்வளவு ஆழமாக மாணவர்களின் இதயங்களை ஆக்கிரமித்திருந்தார்கள்  என்பதற்கு  வலுவான ஆதாரங்களாகும். வழங்கப்பட்ட    வாழ்த்துக் கவிதை இதோ:

” ஜாமிஆ நளீமிய்யாவின் “ஆசிரியத் தந்தை” மௌலவி ஏ.எம்.சி.எம். புஹாரி (பன்பஈ) அவர்களுக்கு 1986 ஆம் ஆண்டு வெளியேறும் மாணவர்களால் வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்து மடல் ” எனும் தலைப்பு பொறிக்கப்பட்டு சட்டகம் இடப்பட்டு வழங்கப்பட்ட கவிதை (45 × 35  CM  அகலமுடையது)

“உன்னையே உருக்கினாய்

மனிதம் வளர்த்தாய்

தன்னையே கசக்கினாய்

ஞானப்பால் தந்தாய் !

இத்தேசத்தில் வீசப்பட்ட  அறிவு வீணை உன்வரவால் புதுராகம் பாடியது. புழுதியில் உட்காரப் போன கல்வி தேவதை

உன்னைக் கண்டதும் தனது பழைய ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள்!

உனக்கு தங்கத்தால் நாட்காலி செய்தால்   உன்னை தங்கத்தால்

எடை போட்டதாகிவிடும்.

உனக்கேது பெறுமதி

உன் பணிக்கேது நிகர்

உன் கண்ணீரினாலும்

செந்நீரினாலும்  கட்டப்பட்ட மாளிகை

நீ  பிரிந்து விட்டால் விசும்பியே

விழுந்து விடும்.

ஆனால் நீ சாய்ந்து விட்டாலும்

உன் பணி சாயாது

ஏனெனில், கத்தியால் கட்டிய  கோட்டை சரிந்திருக்கிறது.

புத்தியால் கட்டிய கோட்டை சரிந்ததில்லை . நீயோ புத்தியைப் பாவித்த கத்தியல்லவா?

வாழ்க வாழ்க ஈருலகிழும்

 ஈடேற்றம் பெருக !”

ஜாமிஆவின் தந்தையுடன் ஜாமிஆவின் அறிவுத் தந்தை

 

Seated (L-R) 1. Moulavi Buhari  2. Lecturer Faleel haq

Standing (L-R) 1.Firdaws Nana  2. Ameer (SLEAS – Sammanthurai) 3. Hanas Mohideen Moulavi, (Puttalam)

/Zan