ஜாமிஆ நளீமிய்யாவின் “ஆசிரியத் தந்தை” புஹாரி மெளலவி – 03

29 November 1930

(மகன் பைசுர் ரஹ்மான்)

தந்தை / மர்மங்கள்

தந்தை அவர்களின் தந்தை அலியார் முகம்மது காசிம் அவர்கள் தந்தையின் 9 ஆம் வயதிலேயே காலமாகிவிட்டார்கள். உடன் பிறந்தோர் நால்வர் புத்தளம் நகர் ஆண்கள் பாடசாலையில் (கால ஸ்கூல்) கற்றார். வாலிப பருவத்தில் வீட்டிலுள்ளோருக்கு எதுவும் அறிவிக்காமல் புத்தளம் நகரத்தவரால் நன்கறியப்பட்ட மௌலவி அப்துல் ஹபூர் அவர்களை சந்தித்து (அணுகுண்டு ஆலிம்சா) தன்னை மத்ரசாவில் சேர்த்துவிடுமாறு வேண்டியுள்ளார் . தனது வீட்டில் அடைக்கலம் அளித்து கண்டிப் பிரதேசத்தில் உள்ள மத்ரசாவில் சேர்த்து விட்டார்கள். ஒருவருடத்தின் பின் அப்துல் ஹபூர் மௌலவி அவர்களுடன் வீடு வந்தபோதுதான் குடும்பத்தினர் விடயங்களை அறிந்து கொண்டனர். மீண்டும் அதே மத்ரசாவிற்குச் செல்லாமல் சென்னை லால்பேட்டையில் அமைந்திருந்த “மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி” யில் 7 வருடங்கள் கற்று (மனபஈ) பட்டம் பெற்றார்கள். கற்பதற்கு பொருளாதார ரீதியில் உதவியர் புழுதிவயல் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட சேவுஸ்கந்தர் அவர்கள் (மூத்த சசோதரியின் கணவர்)

அடிநாள் முதல் வாசிப்புப் பண்பாட்டில் தீவிர ஆர்வமிக்கவராக காணப்பட்டார். அதேபோன்று எழுத்தாக்க முயற்சிகளிலும் பதிப்பகத் துறையிலும் ஆர்வமிக்கவர். சென்னையில் இருந்து வெளியிடப்பட்ட” ரஹ்மத்” சஞ்சிகையில் “மண்ணறையின் மர்மங்கள்” என்ற கட்டுரைத் தொடர் தந்தையால் எழுதப்பட்டது. இப்பிராத்தனையுடனேயே கட்டுரை முற்றுப் பெற்றது.

“இறைவன் நம் அனைவரையும் அவனின் வழிபாட்டில் சிறிதும் தவறாது நடந்து அவனின் அன்பைப் பெற்று இறந்தும் இறவாது புகழோடு இருக்கும் உத்தமர்களில் சேர்த்துக் கொள்வானாக ! ஆமீன் ( முற்றும் ) – ரஹ்மத் மாத இதழ் மலர் :8 இதழ் 11, 1969)

கலாநிதி அஷ்செய்க் A.M. அபுவர்தீன் (Ph.d) அவர்கள் ஆசியுரையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார் .”… அல்ஹாஜ் மௌலவி ஏ.எம்.சி.எம் புஹாரி அவர்கள் தான் எழுதிய “மண்ணறையின் மர்மங்கள்” என்ற இந்த பெறுமதிமிக்க நூலுக்கு தனது மாணவனிடம் ஆசியுரை கேட்டிருப்பது அவரின் பணிவையும் இஹ்லாசையும் எடுத்துக் காட்டுகிறது. உண்மையில் அறிவுக்காக மட்டும் எழுதப்பட்டுள்ள நூல் அல்ல இது. மாறாக இதை வாசிப்பதன் மூலம் மரணத்திற்கு அப்பால் உள்ள நிலையான வாழ்க்கைக்கு ஒவ்வொருவரும் நற்காரியங்கள் செய்து தயாராக வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் .

எனது இளமைப் பருவத்தில் ஜாமிஆவில் இஸ்லாமிய பாதையில் வழிகாட்டி அதில் ஆர்வத்தையும் அன்பையும் தந்து என்றும் எனது மதிப்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய எனது ஆசான் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் கொடுப்பதுடன் சன்மார்க்கப்பாதையில் அவரின் பணி மென்மேலும் தொடர பிரார்த்திக்கிறேன். ..” ,

1986 ல்” “தாருள் ம ஆரிப் ” எனும் பதிப்பகம் உருவாக்கினார்கள். மொழிபெயர்ப்பு நூலொன்றை வெளியிட முனைப்பு காட்டினார்கள். கடிதத்தலைப்பில் நூல் அச்சக செலவு விபரங்களை பதிந்து அறிமுகமானவர்களிடம் உதவி கோரிய போதும் முடிவு பூச்சியமாக இருந்தது.

தொடரும்

/Zan