தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது சிலாபம் ஆனந்தா பாடசாலை

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் மாவட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையும், கல்வி அமைச்சும் இணைந்து மேற்கொண்ட தங்கப்பதக்க பரீட்சிப்பில் சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலை மாணவி எஸ்.எம்.உஸானி சுவிஸ்கா என்ற மாணவி தங்க பதக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே மேற்கொள்ளப்படும் இந்த தங்கப்பதக்க பரீட்சிப்பு சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சி திட்டம் (31-08-2022) நேற்று சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த மாணவி நடுவர் குழாமின் தீர்வுக்கமைய திறமை சித்தியுடன் தங்கப்பதக்கத்துக்கான தகுதியை பெற்றுள்ளார்.

நடுவர் குழுவில் சிலாபம் உதவி பிரதேச செயலாளர் அமில ஜயவிக்ரம, சிலாபம் வலய கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் இசுரு ஜயசுந்தர, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலக உதவி பணிப்பாளர் டீ.எம்.ஆர்.திஸாநாயக்க, புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஏ.எச்.எம்.எம்.ஷாபி ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.

WAK