தம்பபண்ணி சேற்றுப்பள்ளம் பிரதேசத்தில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் தம்பபண்ணி சேற்றுப்பள்ளம் பிரதேசத்தில் மஸ்ஜிதுர்ரய்யான் புதிய பள்ளிவாசல் நேற்று முன்தினம் (06-04-2023) ளுகர் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் வான் வீதி தக்வா பள்ளியினால் இதற்கான காணி வக்பு செய்யப்பட்டு செரண்டிப் பவுண்டேசன் ரிலீப் அன்ட் டெவலப்மன்ட் (SFRD) துருக்கி நன்கொடையாளரினால் இம்மஸ்ஜித் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மஸ்ஜித் திறப்பு விழா நிகழ்வில் மஸ்ஜிதை அமைத்து கொடுத்த குறித்த நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தனர். உலமாக்கள், பொதுமக்கள், மத்ரஸா மாணவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதன் போது உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. பிரபல கட்டட கலை நிறுவனமான புத்தளம் எச்.எம்.பில்டர்ஸ் நிறுவனம் பள்ளிவாசலை அமைத்து கொடுத்துள்ளது.

WAK