தாருஸ்ஸலாம் மஸ்ஜித் ஏற்பாட்டில் ‘Skills Development Programme’

புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் ‘Dharussalam Youth Committee’ யின் ஏற்பாட்டில் ‘Skills Development Programme’ புத்தளம் வாழ் மக்கள் ஒரு பகுதியின் பங்குபற்றுதலுடன் RS மண்டபத்தில் நேற்று (28-03-2023) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் வளவாளராக புத்தளம் பிரதேச செயலகத்தின் Skills Development Officer ஆக பணிபுரியும் அஷ்ஷெய்க் பர்ராஜ் (இஸ்லாஹி) கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாக Dharussalam Volunteers அணியின் Adhnan என்ற மாணவரால் கிராஅத் ஓதப்பட்டது. பின்னர் தலைமை உரை மற்றும் வரவேற்புரையினை புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதின் செயலாளர் Mohammed Refayas Mohammed Shawwaf அவர்கள் வழங்கி வைத்தார். பின்னர் வளவாளரின் நிகழ்ச்சி பகுதி ஆரம்பமாகி அல்லாஹ்வின் பேரருளால் இனிதே நிறைவு பெற்றது.

எமது அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மற்றும் இந்த நிகழ்வை நடத்தி முடிப்பதற்கு உதவிய அனைவருக்கும் தாருஸ்ஸலாம் மஸ்ஜித் நிர்வாகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் சாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்கும் தரம் 8ஐ சேர்ந்த மாணவன் R.Ahamed அவர்கள் தொகுத்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

WAK

(Dharussalam Media)