திகழி பாடசாலை மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு

திகழி பாடசாலையின் நேற்றைய (05-09-2022) காலை நற்சிந்தனையின்போது இவ்வருடம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) 2021(2022) பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறு பெற்று சாதனை படைத்த மாணவர்களின் பங்குபற்றலுடன் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு பாடசாலையின் பிரதி அதிபர் SLM மின்சார் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இம்மாணவர்கள் இச்சிறப்பான பெறுபேற்றை பெற்றுக் கொள்ள எவ்வாறு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதையும் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள எவ்வாறு கற்றலில் ஈடுபட வேண்டும் என்ற தகவல்களையும் மாணவர்களுக்கு அறிவுரையாக வழங்கினார்கள்.

அத்துடன் ஆசிரியர் குழாம் இம்மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்று அவர்களுக்கு வாழ்த்தக்களை தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் உயர்கல்வி கற்று கல்வித்தறையில் உயர்ந்த கௌரவத்தை அடைய ஆலோசகைளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்கள்.

பாடசாலை வரலாற்றில் ஒரே வருடத்தில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பல்கழைக்கழக பட்டப் பாடநெறியை தொடர்வதற்கான வாய்ப்பை பெறவுள்ளார்கள். விஞ்ஞானம், வணிகம், கலை ஆகிய துறைகளில் இருந்து சுமார் 25 மாணவர்களுக்கு பல்கழைக்கழக வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

WAK