திறமையை வெளிப்படுத்தியது சிலாபம் மாணிங்கல முஸ்லிம் மகா வித்தியாலயம்

(எம்.யூ.எம்.சனூன்)

நுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் அண்மையில்  நடைபெற்ற கர்நாடக சங்கீதமும் முஸ்லிம் மாணவர்களுக்குமான தேசிய மட்ட போட்டியில் சிலாபம் மாணிங்கல முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் இரு நிகழ்வுகளில் முதலிடம் பெற்று சாதித்துள்ளனர்.

மாணவர்கள் கலந்து கொண்ட தனி கஸீதா நிகழ்ச்சியில் முதலிடத்தையும், மஸ்அலா நிகழ்ச்சியில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தனி கஸீதா நிகழ்ச்சியில் எம்.எச்.எம்.ரஸீனும், மஸ்அலா நிகழ்ச்சியில் எப்.ஏ.எப்.அம்னா, எம்.ஏ.எப்.ஹப்ஸா, எம்.ஐ.எப்.இஸ்மா, எம்.ஆர்.எப்.ரினாஸா, எம்.ஐ.எப்.இல்மா, எம்.எப்.பரா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் ஆர். எம்.இல்யாஸ் உள்ளிட்ட பாடசாலை முகாமைத்துவ குழுவினர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

WAK