துபாயில் விளையாட்டு மூலம் குப்பை செயற்றிட்டம் விழிப்புணர்வு செய்யப்பட்டது

அணியிற்கு 10 பேர் கொண்ட 6A-side Futsal Tournament 2018 இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் புத்தளம் மைந்தர்கள் Zahira College Puttalam…

News by : Hifans
Photo Courtesy by: Thanzeel, Hammadh, Sabthy, Shabique
.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் (United Arab Emirates / UAE) வசிக்கும் இலங்கையர்களுக்காக மாவனெல்ல ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (2018-11-09) நடாத்தப்பட்ட அணியிற்கு 10 பேர் கொண்ட 6A-side Futsal Tournament 2018 இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் புத்தளம் மைந்தர்கள் Zahira College Puttalam என்ற அணியில் #cleanputtalam என்ற சுலோகம் தாங்கிய jersey அணிந்து விளையாடினார்கள்.
 .
இவ்வணியிற்கு பொறியிலாளர் Rushdy Ahamed தலைமை வகிக்க, அணியில் Rinoos Ahamed, Musfiq, Thasneem, Ashref Deen, Sanoos, Hammadh, Raaed, Farhan, Hifans ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 .
இப்போட்டியில் Zahira College Puttalam உட்பட,
★ Zahira College Mawanella (2 teams)
★ Zahira College Colombo
★ Zahira College Matale
★ Zahira College Gampola
★ Hameed Al Husseini
★ St. Maris College
★ Lumbini College
★ TB Jaya College
★ ACFC
★ United Stars SC
★ Ceylon Challengers
★ Al Nahda (2 teams)
★ AKPC Emirates
 .
ஆகிய 16 அணிகள் இடம்பெற்றன. இதில் 4 குழுக்கள் மூலம் அணிகள் பிரிக்கப்பட்டு குழு ரீதியான (group stage) போட்டிகள் நடைபெற்றன.
 .
15 நிமிடங்கள் கொண்ட இப்போட்டிகளில் முதல் போட்டியில் Zahira College Puttalam மற்றும் ACFC அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக ஆரம்பிக்க போட்டியில் முதல் goal இனை Zahira College Puttalam அணிக்காக  Thasneem அவர்கள் பெற்றுக்கொடுத்தார். இதனை தொடர்ந்து மேலும் 3 goal கள்  Zahira College Puttalam அணிக்காக
Musfiq (2 goals ) மற்றும் Thasneem (1 goals ) ஆகியோரால் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இதனால் 4:0 கணக்கில் Zahira College Puttalam அணி முதல் வெற்றியை இலகுவாக பதிவுசெய்தது.
 .
இரண்டாம் போட்டியில் Zahira College Puttalam மற்றும் AL NAHDA RED ஆகிய அணிகள் போட்டியிட்டன. இப்போட்டியில் Ashref Deen தலா 1 goal இணையும், Thasneem தலா 1 goal இணையும் பெற்றுக்கொடுக்க Zahira College Puttalam அணி 2:0 என்ற கணக்கில் வெற்றிபெற்றதுடன் அடுத்த விலகல் சுற்றிற்கு (knockout stage) தகுதியை பெற்றுக்கொண்டது.
 .
குழு போட்டிகளில் இறுதி போட்டியில்  Zahira College Puttalam மற்றும் Zahira College Mawanella ஆகிய இரு பலமான அணிகள் மோதின. இதன்போது இரு அணிகளும் goal பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தினால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
 .
குழு 4 இல் அங்கம் வகித்த Zahira College Puttalam மற்றும் Zahira College Mawanella ஆகிய இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி மற்றும் 1 போட்டியில் சமநிலை பெற்று சமனான புள்ளிகள் பெற்றிருந்தமையினால் பெறப்பட்ட goal களின் அடிப்படையில் Zahira College Puttalam (6 goals) அணி நேரடியாக கால் இறுதிச்சுற்றிற்கு சென்றது (quarter final)
 .
கால் இறுதிச்சுற்றில் Zahira College Puttalam அணியுடன் மோத Zahira College Colombo அணியானது முன் கால் இறுதி போட்டியில் (pre quarter final) வெற்றி பெற்று களமிறங்கியது. இரு அணிகளும் பலமான அணிகளாக காணப்பட்டதுடன் போட்டியானது விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
 .
இரு அணிகளும் goal பெற்றுக்கொள்ள சிரமப்பட்டிருந்த சமயத்தில் Thasneem அவர்களினால் Zahira College Puttalam இற்கான முதலாவது goal போடப்பட்டது. இக் goal  ஆனது Zahira College Puttalam ஆதவாளர்களுக்கு உட்சாகத்தை வழங்கிய அதே வேளை Zahira College Colombo ஆதவாளர்களுக்கு கவலையை உண்டுபண்ண போட்டியானது சிறிய முறுகல் நிலையில் தொடர்ந்தது.
 .
இதைபொருட்படத்தாத நிலையில் மற்றுமொரு goal அணித்தலைவர் Rushdy Ahamed இனால் Zahira College Puttalam அணியிற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. அரை மணிநேரச்சுற்றில் ஆதிக்கம் செலுத்தியது.
 .
நடுவரின் அழைப்பை ஏற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் அரை மணிநேர சுற்றானது மேலும் கடுமையாக இருந்ததுடன் போட்டி முடிவடையும் தருவாயில் Zahira College Colombo இனால் மிக குறிகிய நேர இடைவெளிகளில்  2 goal போடப்பட்டு போட்டியானது தாண்ட உதைக்கு தள்ளப்பட்டது.
 .
அணிக்கு 3 தாண்ட உதைகள் வழங்கப்பட்டதுடன் இதில் Zahira College Colombo 3 தாண்ட உதைகளை தனக்கு சாதகமாக்கி வெற்றியை பெற்றுக்கொண்டது. நடைபெற்ற அனைத்து போட்டிகளை விட இப்போட்டியே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்குள்ளவர்களின் வாய்மொழிச்செய்திகள் பறைசாற்றின.
.
Zahira College Puttalam அணிக்கு உட்சாகங்களையும் ஊக்கங்களையும் கொடுக்க ஐக்கிய அரபு இராச்சிய வாழ் புத்தளம் மக்கள் பலர் கலந்துகொண்டு சிற்றுண்டி உபகாரங்களையும் வழங்கி இருந்தனர்.
 .
சகோதரர் Roshan, Rushdy Ahamed மற்றும் Rinoos Ahamed ஆகியோர் Zahira College Puttalam அணியிற்காக போக்குவரத்து,  விளையாட்டு, உணவு மற்றும் ஏனைய அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணியிருந்தார்கள் என்பது கோடிட்டு காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
 .
WAK
 .