தும்மோதரை அஷ்-ஷிபா பாலர் பாடசாலையில் நிறக் கண்காட்சி

(எம்.யூ.எம்.சனூன்)

தும்மோதரை அஷ் – ஷிபா பாலர் பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர்களின் நிறக் கண்காட்சி (colour exhibition) நேற்று (07-03-2023) பாலர் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் ஆலோசனை சபை உறுப்பினர் நயீம் அலாவுதீனின் வழிகாட்டலில் தலைமை ஆசிரியை றிப்கா றிஷாத், உதவி ஆசிரியை நஸ்மா நாஸிர் ஆகியோரின் ஏற்பாட்டில் பெற்றார்களின் ஒத்துழைப்போடு இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இங்கு கல்வி பயிலும் 23 மாணவர்களால் பல்வேறு நிறங்களினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, கலந்து கொண்ட அதிதிகளினால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

WAK